Friday, February 25, 2011

சரியா ? தவறா ?

சரி என்று நினைத்து
செய்யப்பட்ட தவறுகள்
தவறு என்று தெரிந்தும்
செய்யப்பட்ட தவறுகள்
சரியா தவறா என்று
நிர்ணயிக்க முடியாதவை
இவை எல்லாம் தாண்டி
இன்று விஞ்சி நிற்பவை
சரியா தவறா ?

கதம்பம்

என் எதிரிக்கு எதிரி
நான் தான் - எனக்கு
எதிரியும் நான் தான் -
நானே நான் தான்
நானே நானில்லை !
-----------------*--------------*_--------------------*-----------------------
சமுதாயம் அதனையும் அதன் ஆதரவாளர்களையும், எதிரிகளையும் , அதன் வரலாற்றையும் தனக்கு தானே புனைகின்றது !
-----------------*--------------*_--------------------*-----------------------
வயிற்றில் தான் அந்த
மாற்றம் வேண்டும்!
பரிணாம வளர்ச்சியில் அடுத்த
அடி - செரிமான மண்டலம்
பணத்தையும் நகைகளையும்
concrete களையும் செரிக்க வேண்டும்!
-----------------*--------------*_--------------------*-----------------------
தொடங்கி விட்டது
ஓர் உறக்கத் திருவிழா
இனி ஒவ்வொரு நாளும்
கொண்டாட்டம் தான்
தலைப்பு செய்திகள் மாறிவிடும்
ஊழல் கொலை குற்றம் மறந்து
விடும் எங்கும் நூறு ஐம்பது அவன்
வெற்றி இவன் வெற்றி என கொண்டாடும்
ஒவ்வொரு நிமிடமும் வீண் தான் !
-----------------*--------------*_--------------------*-----------------------
அலை ஓய்ந்தாலும் அலைகள் ஓய்வதில்லை !
-----------------*--------------*_--------------------*-----------------------
காதலின் அர்த்தம் மாறிட
வேண்டும் ஆண் பெண்ணை
தற்கொலையை தகாத உறவை
தாண்டி ஆதலால் அனைவரும்
காதலியுங்கள் அனைவரையும் !
-----------------*--------------*_--------------------*-----------------------
நாம் சரி என்று நம்புவதை சரி என்கிறோம் , நாம் நம்புவதை சரி என்று சொல்பவர்களே அந்த நம்பிக்கையை விதைக்கிறார்கள் !
-----------------*--------------*_--------------------*-----------------------
நீர் துளியில் கலந்திட்ட கடல்
அலைகளுக்கு அப்பால்
-----------------*--------------*_--------------------*-----------------------
அடுக்கு மொழிகளே இங்கு இலக்கியம்
எதிர் பேச்சே இங்கு சாமர்த்தியம்
ஆற அமர பேசுவதே செயல்பாடு !
-----------------*--------------*_--------------------*-----------------------
கட்சிகள் இங்கே ஆயிரமாயிரம்
காட்சிகள் ஆனால் ஒன்றுதான்
அவைகள் சுட்டி காட்டுவது
எதிர்கட்சியின் தவறை தான்
ஏனெனில் இங்கே எவரும்
எதையும் செய்வதில்லை குற்றம்
சொல்லுவதை தவிர !
-----------------*--------------*_--------------------*-----------------------
தேடி கொண்டே இருக்கிறோம் நாம் தேடுவது என்னவென்று மறக்கும் வரை !
-----------------*--------------*_--------------------*-----------------------
மொழிகள் இல்லாத காலத்தில் மனசாட்சி எந்த மொழியில் பேசி இருக்கும் ?
-----------------*--------------*_--------------------*-----------------------
எழுத்து பிழை
சந்த பிழை
தர்க்க பிழை
நீக்கி எழுதிய
எழுத்து என்னை
பிழை என்றது !
-----------------*--------------*_--------------------*-----------------------

நீங்கள் அவசரமா எதாவது செய்து கொண்டிருந்தீர்களானால்
நீங்கள் சோம்பேறிகளா இருந்தீர்கள் என்று அர்த்தம் ;-)

-----------------*--------------*_--------------------*-----------------------

அவதாரம்

அடுத்த அவதாரத்துக்கு அவன்
ஆயத்தமானான் காப்பது அவன்
தொழில் - ஆலோசனையில் இறங்கினான்
ஆலோசனையின் முடிவில் கலங்கிட்டான்
விஸ்வரூபத்தை விளம்பரமாகவும் உண்மையை
குழப்பமாகவும் அதர்ம தர்ம பேதமின்றி இவர்கள்
வாழ்கிறார்கள் என்றது ஆலோசனை முடிவு
அவன் அழிப்பவனிடம் போய் முறையிட்டான்
அரை நொடியில் என்றான்- இவன் தத்துவமாய்
அவதாரம் எடுத்தான் அரை நொடியில் அரை
கூட தாண்டவில்லை இதோ காப்பவன்
காத்திருக்கின்றான் அழிவுக்காக !