Thursday, April 28, 2011

கதம்பம் 7

இயலாமையால் வருவது
ஆத்திரமும் அழுகையும்
அதை ஆணுக்கொன்றும்
பெண்ணுக்கொன்றும் பிரித்ததுதான்
சமூகத்தின் முதல் பிரிவினையோ


******************************************************


என்னை சண்டைக்கோழிகளும்
சமாதான புறாக்களும் சமமாகத்தான்
காயப்படுத்தி உள்ளன - வரலாறு



கதம்பம் 3

ஆள்வதற்கு நரி போதும்
நாய்கள் வாழும் காடு!


&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&


வீட்டு நாய்க்கு
சுதந்திரம் கொடுத்தால்
நாலு தெரு கூட
தாண்டாது !

கதம்பம் 4

அவை ஒழுங்காக நின்றன
ஒன்றையொன்று ஈர்த்தும்
ஒன்றையொன்று விலக்கியும்
அவற்றில் ஒன்று தான்
பெருதென்றெண்ணி விலகி சென்றது
இப்பொழுது அவைகள் தான்
தான் என்று ஈர்த்தும் விலகியும்
விலகியும் ஈர்த்தும் தன்
பயணத்தை தொடர்கின்றன
அவற்றில் ஒன்று தான்தான்
எல்லாம் என்று ஆகும்
வரை இது தொடரும் !


----------------------------------------------------------


மௌனங்கள் சொல்லாததை
சொல்ல முனைந்திட்ட
வார்த்தைகள் மௌனித்து
நின்றன !

கதம்பம் 6

தினம் தோறும் சீரியல்
பார்ப்போர் வருஷம் தோறும்
கிரிக்கெட் பார்ப்போர்
அரை மணிக்கொரு நேரம்
கட்சி நியூஸ் பார்ப்போர்
இவர்களெல்லாம் தற்கொலை
செய்து கொள்வாரோ ஒரு வாரம்
இடியட் பாக்ஸ் வேலை செய்யலேன்னா?


---------------------------------------------------------------------------------



தினம் தினம்
விழிக்கிறேனா
தூங்குகிறேனா
தூக்கத்தில் இருந்து
விழிக்கிறேனா விழிப்பில்
இருந்து தூங்குகிறேனா
தூக்கமும் விழிப்பும்
இல்லாத ஒரு நிலையில் ....


--------------------------------------------------------

கதம்பம் 5

வார்த்தைகளால் வாதிடலாம்
வாள்களினால் போரிடலாம்
வரலாற்றில் இடம் பெறலாம்
ஆனால் அக்கேள்விக்கு விடை
இல்லை விடை தேடியவர்களே
வரலாற்றில் - விடை தெரிந்தவர்களை
வரலாறு மறைத்துவிட்டதோ ?

#####################################


புரிந்த மாதிரி பேசிகொண்டிருந்தார்கள்
எல்லாருக்கும்
புரியாமல் பேசி கொண்டிருந்தார்கள்
அவர்களுக்கே
அவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள்
புரியாத மொழியில்


#########################################

பரமபிதா கூறாததையா
தேசபிதா கூறினார் ?
அவர்கள் அணுகுண்டு வீசுகிறார்கள்
ஆயுதம் ஏந்துகிறார்கள் இவர்கள்
அஹிம்சை அஹிம்சை என
இம்சை செய்கிறார்கள் !


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


வறுமையை உண்டு பண்ணுபவர்களே
வறுமை கோட்டையும் உருவாக்கிறார்கள் !
இலவசத்தை அறிமுகப்படுத்துபவர்களே
இல்லாமையையும் உருவாக்குகிறார்கள் !
வாக்கு அளிப்பவர்களே
வாழ்க்கையையும் அழிக்கிறார்கள்!


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


தினந்தோறும்
நடந்து செல்கிறோம்
யுகம் தோறும்
கடந்து செல்கிறோம்
தினமொரு யுகமாய்
யுகமொரு தினமாய்
எதை கடந்து !
எதை நோக்கி!
கடந்து செல்கிறோமோ?
அடைந்து கிடைக்கிறோமா


கதம்பம் 2



ஒற்றை மாட்டு வண்டியில்
பயணம் - மாடாய்
வண்டியோட்டியாய்
வண்டியாய் பயணமாய் !
+++++++++++++++++++++++++++++++++++++++++++++

கி. பி 2250

2011 ல் உருவாக்கப்பட்ட குறுந்தகட்டில் மோதி திரும்பிய ஒளி சிதறலொன்று ....
கிரிக்கெட் ஆடினால் நாட்டில் பஞ்சம் தீரும் என்றொரு மூடநம்பிக்கை.....

***********************************************************************************************************


இங்கு இவை இருக்கும்
இருந்து கொண்டே இருக்கும்
இருக்கும் வரையில் இருக்கும்
இல்லாவிடினும் இருக்கும்...


இங்கு இவை இல்லை
இல்லாத பொழுது இல்லை
இருக்கும் பொழுதும் இல்லை

இல்லை இல்லவே இல்லை
இருக்கு இருக்கவே இருக்கு !

--------------------------------------------------------------------------------------------


தலை எழுத்தை நம்புபவன்
அது மாறும் என்றும்
நம்ப மாட்டான்
இன்று மட்டும் மாறி
விடவா போகுது
முடிகிறது ஒரு கூத்து
இதில் எவன் வென்றாலும்
தோற்றாலும் மாற்றம்
ஏதுமில்லை !

=================================================

வாய்வித்தைகாரர்கள் அவர்கள்
வீதி தோறும் கை அசைத்து
உழைப்பவனின் வரி எல்லாம்
உழைக்காதவனுக்கே இலவசம்
என்று பிச்சை கேட்பார்கள்
நீங்கள் வாக்களியுங்கள் அவர்கள்
வாக்கை அழிப்பார்கள் !

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

கொசு பறக்கும்போது ஏற்படும் சத்தம் அதன் இருப்பை காமித்து கொள்ளத்தானோ ?


%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

பிச்சைகாரர்களை திருடர்களே
ஆள்வார்கள்!!!


^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^


ஏன்னு தெர்ல
எதுக்குன்னு புர்ல
எப்படின்னு வேணா முடியும்
ஆனா எப்படி வேணும்னாலும் ?


$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$


தே.அ
திருட்டு மற்றுமல்ல ஊழல் கூட தொழில் என்று சங்க இலக்கியத்தில் மாற்றம் செய்யப்படும்!




Tuesday, April 26, 2011

நான் படித்த நாவல்கள் - சென்னை புத்தக கண்காட்சிக்கு(2011) பின்பு

  1. நாய்கள் - நகுலன்
  2. நவீனன் டைரி – நகுலன்
  3. நாளை மற்றுமொரு நாளே - நாகராஜன்
  4. குறத்தி முடுக்கு – நாகராஜன்
  5. வாடிவாசல் – செல்லப்பா
  6. சாயாவனம் - கந்தசாமி
  7. பொய்த்தேவு - க.நா.சு
  8. என் பெயர் ராமசேஷன் - ஆதவன்
  9. இரவுக்கு முன்பு வருவது மாலை (குறுநாவல்கள் தொகுப்பு ) – ஆதவன்
  10. மானசரோவர் – அசோகமித்திரன்
  11. 18 வது அட்சக்கோடு – அசோகமித்திரன்
  12. அக்னி இந்திரா பார்த்தசாரதி
  13. ஜீரோ டிகிரி - சாரு நிவேதிதா
  14. தேகம் - சாரு நிவேதிதா
  15. ராஸ லீலா - சாரு நிவேதிதா
  16. எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்சி பனியனும் - சாரு நிவேதிதா
  17. அனல் காற்று - ஜெயமோகன்
  18. கன்னியாகுமரி - ஜெயமோகன்
  19. விஷ்ணுபுரம் – ஜெயமோகன்
  20. காடு – ஜெயமோகன்
  21. உலோகம் - ஜெயமோகன்
  22. கம்பா நதி - வண்ண நிலவன்
  23. கடல்புரத்தில் - வண்ணநிலவன்
  24. சொல் என்றொரு சொல் - ரமேஷ் - பிரேம்
  25. ஆல்பா - ராமகிருஷ்ணன்
  26. ஆழி சூழ் உலகு - ஜோடி குரூஸ்
  27. என் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது - வைக்கம் முகமது பஷீர் (சுரா)
  28. ஜஸ்டிஸ் ஜகந்நாதன் – தேவன்
  29. சினிமாவுக்கு போன சித்தாளு - ஜெயகாந்தன்
  30. டார்ஜீலிங்கில் ஓர் அபாயம் - சத்யஜித்ரே
  31. மகாராஜாவின் மோதிரம் - சத்யஜித்ரே
  32. அனுபிஸ் மர்மம் - சத்யஜித்ரே
  33. கேங்டாக்கில் வந்த கஷ்டம் - சத்யஜித்ரே
  34. கைலாஷ் சௌதுரியின் ரத்தினக்கல் - சத்யஜித்ரே
  35. தங்கக் கோட்டை - சத்யஜித்ரே
  36. கைலாஷில் ஒரு கொலையாளி - சத்யஜித்ரே
  37. சாவி சத்யஜித்ரே
  38. கல்கா மெயிலில் நடந்த சம்பவம் - சத்யஜித்ரே
  39. நன்றி : சென்னை புத்த கண்காட்சி , உடுமலை.காம் , நிர்மல்(https://profiles.google.com/a.nirmal),http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=9298, nhm.in

Monday, April 25, 2011

மற்றுமோர் மாற்றம் !

நட்ட நடு வீட்டிலே
நண் பகலிலே
நான் கிடத்தப்பட்டு இருந்தேன்
நிர்வாணமாய்
கண் சிமிட்டலும் கையசைவும்
காலசைவும் புன்னகையும்
அழுகை எனும் ஒலிஎழுப்பி
ஆனந்தமாய் அப்பொழுது
ஒரு மொழியில்லை ...ஆனால்
ஒவ்வொரு அசைவுக்கும் ஆயிரம்
ஆயிரம் அர்த்தங்கள் !

இப்பொழுது
பேச ஒரு மொழி
எழுத ஒரு மொழி
அறையின் மூலையிலே
போர்வையின் உள்ளே
சத்தமின்றி அழுகையிட்டு
முகம் கழுவி எழுந்து வந்தேன்
அழுக்கில்லா ஆடை அணிந்து
அர்த்தமற்ற வார்த்தைகளுடன் !