முன் குறிப்பு:
வெகு நாளாக கவிதை , கதை என்று சிலவற்றை கிறுக்கியாச்சு, கட்டுரை என்று ஒன்று மிச்சம் உள்ளது , அதையும் ருசித்திடலாம் என்ற ஆவலில் ...
கட்டுரை?
ஆவலடுடன் எதிர்பார்திருந்த கோணல் பக்கங்களின் தொகுப்பை கிழக்கு பதிப்பகம் மூலமாக புத்தக கண்காட்சியில் வாங்க இயன்றது ... புத்தக கண்காட்சியில் வாங்கிய பல புத்தகங்களில் ஒன்றிரண்டை புரட்டி பார்க்க இயன்றது ... வாங்கிய புத்தங்களின் பட்டியலை பின்னொரு நாளில் பார்க்கலாம்
முதலில் திருப்பிய பக்கங்கள் , கோபி கிருஷ்ணனின் படைப்புகளில் இருந்து டேபிள் டென்னிஸ் என்ற குறு நாவல் , அய்யனார் விஸ்வநாத் பிளாக்கில் அது ஒரு நல்ல நாவல் என்று படித்த நாளில் இருந்து , தேடிக்கொண்டிருந்ததால் நேரடியாக அந்த நாவலுக்கு சென்றேன் , படித்ததில் சில மணி நேரம் தூக்கம் தொலைந்தது , வேறு விமர்சனம் தேவையா?
கோணல் பக்கங்களின் நேரான பக்கங்களில் பிரட் உப்புமா செய்முறை படித்தவுடன், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரில் செய்த பிரட் உப்புமா நினைவில் வந்தது , வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு , உளுந்துடன் தாளித்த பிறகு , பிரட் ஐ பிச்சு போட்ட பிறகு அளவுக்கு அதிகமாய் தண்ணி ஊற்றி , கூழாக மாற்றி வீணடிக்க மனசு வராமல் , ஒரு வழியாக உள்ளே தள்ளியது நினைவுக்கு வந்தது!
சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தன் இரண்டு ஆண்டுக்கு பிறகு கட்டுரையை கண்ட உடன் முழித்துக்கொண்டான். கடைக்கு சென்று , சால்ட் பிரட் கேட்டால் , அங்கு இருப்பதில் பார்த்து எடுத்துக்கோ என்று சொன்னார் அண்ணாச்சி. இரண்டு மூன்று பிரட் பொட்டலங்களை , எடுத்து பிறகு நான் அறிந்து கொண்டது..
1. மைதா அல்லது ஆட்டாக்களில் பிரட் செய்யப்படுகிறது .
2. வெள்ளை நிறத்திலும், பொன்னிறத்திலும் பிரட் கிடைக்கின்றது.
3. குழந்தைகளுக்கு வெள்ளை நிற பிரட் பிடிக்காது .
மாடர்ன் பிரட் ஒரு பாக்கெட் எடுத்துக்கொண்டேன், மேலும் சாரு செய்முறையில் ஏகப்பட்ட ஐட்டங்கள் இருந்தன , நமக்கு சரிப்பட்டு வராது என்று , பெரிய வெங்காயமும் , குடை மிளகாய்யும் (capsicum) வாங்கி கொண்டேன் .
செய்முறை:
எண்ணெய் சட்டியில் எண்ணெய் ஊற்றி , கடுகு, கடலை பருப்பு போட்டு தாளித்து கொள்ளவும், உளுந்து இல்லை அதனால் கடலை பருப்பு ! பிறகு தேவையான அளவு பிரட் , நான் எடுத்தது நாலு , பிச்சு போடவும், பின் முன்னே அறிந்து வைத்திருந்த வெங்காயத்தையும், குடை மிளகாய்யையும் , அத்துடன் போட்டு வதக்கவும், எல்லாம் நன்கு வெந்த உடன் , சாப்பிட வேண்டியதுதான் ... அடுப்பை முழு நேரமும் சிம்மிலே வைத்திருக்கவும்...
பிரட் உப்புமா நல்லா வந்ததா ?