Friday, June 24, 2016

உரையாடல்

எண்ணற்ற சாத்தியங்களை
வார்த்தைகளால்
பூகோளம் வரலாறு
அறிவியல்  இன்னும்
பல பல என
உரையாடல் நிகழ்வில்
சிந்திய வார்த்தைகளை
செங்குத்தாக அடுக்கி சிகரம்
ஏறி சொற்போர்
நிகழ்த்தி
நா வறண்டு
தொண்டை
வறண்டு
பேச முடியாமல்
மௌனிக்கையில்
தாகம்
தணிகிறது !

Thursday, April 07, 2016

மனிதனுக்குப் பின்னால் ;-)

ரோபோக்களும்
எந்திரங்களும்
பிளாஸ்டிக்குகளும்
கண்ணீர் விட்டு
கதற ஆரம்பிக்கும்
--
பூமி சூரியனின்
நகலாக  மாறிய
பின் !

Wednesday, May 06, 2015

கதை சொன்ன கதை


பையனை தூங்க வைக்க கதை சொல்லலாம்னு ஆரம்பிச்சேன் !

அப்பா கதை சொல்லவா?
 ம்ம்

(நாம்   முதன்முதலாக கேட்ட அதே பாட்டி  கதையை சொல்ல ஆரம்பித்தேன்)

ஒரு ஊர்ல ஒரு பாட்டி  இருந்தாங்க

ம்ம்ம்  காக்கா காக்கா

ஆமாம் ஆமாம்  ... மரத்துல ஒரு காக்கா இருந்துச்சு...

ம்ம்ம்  கொக்கு  கொக்கு

கொக்கா?  ( இப்போ பாட்டி  வடை சுட்ட கதைல கொக்கு வரணுமா? )

ஆமாம்  மரத்துக்கு கீழ ஒரு குளம் இருந்தது , அங்க ஒரு கொக்கு ஒத்தை கால்ல நின்னுச்சு ...

பாட்டி வடை சுடுவதற்காக தண்ணி பிடிக்க போனாங்க...

ம்ம்ம்

அப்போ காக்கா  சொயுன்னு பறந்து அந்த குடத்தை குளத்துக்குள்ள தள்ளி விட்டுடுச்சு ...

பாட்டி அழ  ஆரம்பிச்சுட்டாங்க  ...

அதை பார்த்த  கொக்கு ,, தண்ணிக்குள்ள போய் அந்த குடத்தை எடுத்து வந்து கொடுத்துச்சு....
ம்ம்ம்

பாட்டி அதை எடுத்துட்டு போய் மாவு பிசைய  தண்ணி எடுத்தாங்க.. பார்த்த.. அதுல ஒரு விலை மதிப்பில்லா நகை இருந்துச்சு......

அதை வித்துட்டு பாட்டி இப்போ பெரிய கிளப் கடை ஆரம்பிச்சுட்டாங்க , அப்புறம் சந்தோசமாக இருந்தாங்க .....


(அப்புறம் என்ன அதுக்கு அப்புறம்... இன்னும் நெறைய கதை எட்டுகட்டி சொல்ல வேண்டியதாயிற்று)

Friday, October 31, 2014

work life balance !

  சில சமயங்களில் பத்திலிருந்து பதினாறு மணி நேரம் வேலை பார்க்கும் பொழுதோ அல்லது வார இறுதியில் வேலை பார்க்கும்பொழுதே work life balance  - என்று மனமும் சில  நேரங்களில் வாயும் முணு முணு க்கும்போழுதே அதை புன்னகையால்(?!) கடந்து செல்ல உதவுவவது ...காலை ஒன்பது மணியிலிருந்து இரவு ஒன்பது மணி வரை , ஞாயிறு நாட்களில் கூட  அரை நாளும்(9 to  3) மாதம் முழுவதும் வேலை பார்த்து சம்பாதித்த முதல் சம்பளமான 50 ரூபாய் (94 ல் )...இன்னும் கூட இது மாதிரி அற்ப சம்பளத்திற்காக உழைக்கும் பலரின் வாழ்வில் work life  balance ????

Wednesday, May 01, 2013

மதிமுகிலுக்காக

யார் செய்த 
சதியோ விதியோ 
உன்னை சுமக்க 
வாய்ப்பில்லாமல் இருந்தது 
இதோ என் கைகளில் நீ 
முடிந்தது ஒரு காத்திருப்பு 
தொடர்கிறது அடுத்தது 
எப்பொழுது நீ பேசுவாய் என்னிடம்?


Friday, February 08, 2013

விளையாட்டு



படைவீரன் நான்
என்னுடையை பணி 
நேராக செல்வது
ராஜா ராணி மந்திரிகளை
காப்பாற்றுவது
ஆம் அவர்கள் தானே முக்கியம்
சில நேரங்களில் சக படைவீரனால்
வெட்டுப்படலாம் எதிர்பார்க்கலாம்
குறுக்கே பாய்ந்து வரும்
அந்த வெட்டு
பல நேரங்களில் எதிர்பாராமலே
வெளியேற்றப்படலாம்
சதியினால் தந்திரந்தினால்
ஆனாலும் தப்பித்து
கடைசி வரை சென்றால்
உருமாற்றம் உண்டு
மாறும் வரை
தடுமாற்றம் தான் !
ஆம் சதுரங்க
ஆட்டத்தில் படை வீரன் நான் !

Saturday, January 26, 2013

பிரட் உப்புமா

முன் குறிப்பு:
          வெகு நாளாக கவிதை , கதை என்று சிலவற்றை கிறுக்கியாச்சு, கட்டுரை என்று ஒன்று மிச்சம் உள்ளது , அதையும் ருசித்திடலாம் என்ற ஆவலில் ...


கட்டுரை?

        ஆவலடுடன் எதிர்பார்திருந்த கோணல் பக்கங்களின் தொகுப்பை கிழக்கு பதிப்பகம் மூலமாக புத்தக கண்காட்சியில் வாங்க இயன்றது ... புத்தக கண்காட்சியில் வாங்கிய பல புத்தகங்களில்  ஒன்றிரண்டை புரட்டி பார்க்க இயன்றது ... வாங்கிய புத்தங்களின் பட்டியலை பின்னொரு நாளில் பார்க்கலாம்

        முதலில் திருப்பிய பக்கங்கள் , கோபி கிருஷ்ணனின் படைப்புகளில் இருந்து டேபிள் டென்னிஸ் என்ற குறு நாவல் , அய்யனார் விஸ்வநாத் பிளாக்கில் அது ஒரு நல்ல நாவல் என்று படித்த நாளில் இருந்து , தேடிக்கொண்டிருந்ததால் நேரடியாக அந்த நாவலுக்கு சென்றேன் , படித்ததில் சில மணி நேரம் தூக்கம் தொலைந்தது ,  வேறு விமர்சனம் தேவையா?

     கோணல் பக்கங்களின் நேரான பக்கங்களில் பிரட் உப்புமா செய்முறை படித்தவுடன், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரில் செய்த பிரட் உப்புமா நினைவில் வந்தது , வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு , உளுந்துடன் தாளித்த பிறகு , பிரட் ஐ பிச்சு போட்ட பிறகு அளவுக்கு அதிகமாய் தண்ணி ஊற்றி , கூழாக மாற்றி வீணடிக்க மனசு வராமல் , ஒரு வழியாக உள்ளே தள்ளியது நினைவுக்கு வந்தது!

    சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தன் இரண்டு ஆண்டுக்கு பிறகு கட்டுரையை கண்ட உடன் முழித்துக்கொண்டான்.  கடைக்கு சென்று , சால்ட் பிரட் கேட்டால் , அங்கு இருப்பதில் பார்த்து எடுத்துக்கோ என்று சொன்னார் அண்ணாச்சி. இரண்டு மூன்று பிரட் பொட்டலங்களை , எடுத்து பிறகு நான் அறிந்து கொண்டது..
             1. மைதா அல்லது ஆட்டாக்களில் பிரட் செய்யப்படுகிறது .
             2. வெள்ளை நிறத்திலும், பொன்னிறத்திலும் பிரட் கிடைக்கின்றது.
             3. குழந்தைகளுக்கு வெள்ளை நிற பிரட் பிடிக்காது .

     மாடர்ன் பிரட் ஒரு பாக்கெட் எடுத்துக்கொண்டேன், மேலும் சாரு செய்முறையில் ஏகப்பட்ட ஐட்டங்கள் இருந்தன , நமக்கு சரிப்பட்டு வராது என்று , பெரிய வெங்காயமும் , குடை மிளகாய்யும் (capsicum) வாங்கி கொண்டேன் .

    செய்முறை:
                எண்ணெய் சட்டியில் எண்ணெய்  ஊற்றி , கடுகு, கடலை பருப்பு போட்டு தாளித்து கொள்ளவும்,  உளுந்து இல்லை அதனால் கடலை பருப்பு ! பிறகு தேவையான அளவு பிரட் , நான் எடுத்தது நாலு , பிச்சு போடவும்,  பின் முன்னே  அறிந்து வைத்திருந்த வெங்காயத்தையும், குடை மிளகாய்யையும் , அத்துடன் போட்டு வதக்கவும், எல்லாம் நன்கு வெந்த உடன் , சாப்பிட வேண்டியதுதான் ... அடுப்பை முழு நேரமும் சிம்மிலே வைத்திருக்கவும்...


பிரட் உப்புமா நல்லா வந்ததா ?