Friday, December 30, 2011

கடுந்தவம் இயற்றி விடும்

ஆனந்த கூத்தாடியது அவைகள்

முன்னும் பின்னும்

மேலும் கீழும்

கண்டதில்லை இவ்வளவு வேகத்தை

ஆனாலும் அஞ்சிவிடவில்லை

ஆனந்த கூத்தாடியது அவைகள்

இலைகளை உதிர்த்தன

கிளைகளை உதிர்த்தன

தன்னையே உதிர்த்தன

கூட்டம் கூட்டமாக சாய்ந்தன

ஆனந்த கூத்தாடியது அவைகள்

ஓயவில்லை ஆட்டம்

குறையவில்லை கூச்சல்

எல்லாம் ஓய்ந்ததும்

வரிசையில் நின்றார்கள் இவர்கள்

சூறை காற்று சூறையாடியதுக்கு

நிவாரண நிதி வேண்டி

அவைகளிடம் சொல்லி விடாதீர்கள்

மீண்டும் காற்றை வேண்டி

கடுந்தவம் இயற்றி விடும் !

Thursday, December 29, 2011

4567

“அப்போது பத்தரையில் இருந்து பதினொன்றுக்குள் இருக்கலாம். வழக்கமாக எட்டுக்கெல்லாம் கிளம்பிவிடும் பழக்கம் , எட்டுக்கு கிளம்பியிருந்தால் அங்கு வர கால் மணிநேரம் தான் ஆகி இருக்கும் , ஆனால் இன்னைக்கோ கிளம்பியது பத்து இருக்கும், வீட்டை விட்டு வெளியே வந்தப்போ மணி பார்த்தப்போ ஒன்பது ஐம்பது , கீழே வந்து பைக்கை துடைத்து வெளியே கொண்டு வந்து புறப்பட பத்து நிமிஷம் ஆகி இருக்கும். எட்டு மணிக்கு கிளம்பி இருந்த கண்டிப்பாக பிரச்சனை இருந்து இருக்காது , சாலையில் பெரிய அளவில் வாகன புழக்கம் இருக்காது , வேகமாக வந்து விடலாம் , ஆனா என்ன பண்ணுறது , அது அக்னீபாத் சீரிஸ் (கிரிக்கெட்டுக்கு சினிமா விளம்பரம்?)

பாக்ஸிங் டெஸ்ட் , நம்ம ஆளுங்களே பந்து நல்ல வீசி இருந்த மாதிரி இருந்தது , அப்படின்னா அவங்க பௌலிங் எப்படி இருக்கும் என்ற ஆர்வத்தில் , பார்க்க ஆரம்பிச்ச எதிர் பார்த்த மாதிரியே செமையா இருந்தது , நம்மளுக்கு தான் இவன் போன அவன், அவன் போன அடுத்தவன் நல்ல பண்ணுவான் ஒரு ஆர்வத்துல பார்க்க ஆரம்பிச்சா , அவனுங்களும் நம்ம போலவே அடுத்தவன் இருக்கான்னு போய்கிட்டே இருந்தானுங்க , நாம நம்புன எல்லாமே இப்படிதான் , இந்த சினிமா நல்ல இருக்கும், இந்த ஆட்சி நல்லா இருக்கும் , இந்த வேலை நல்ல இருக்கும், தேடி தேடி போனால், பெரும்பாலும் புஸ்வானம் தான் , எது நடந்தது இது மட்டும் நடக்குறதுக்கு, நமக்குதான்னு இப்படின்னா எல்லாரும் கிட்ட தட்ட அந்த லெவல்ல தான் இருக்காங்க !

இதையே பார்த்து கிட்டு இருந்தா நம்ம பொழப்பு நாறிடும், நடையே கட்டுவோம்னா , நடையே கட்டுறதுன்னா நடந்தே இல்ல, நடந்தே இல்லன்னாலும் நடைல தான் ஆரம்பிக்கணும் ,அப்படிதான் தாமதமாக கிளம்பினேன்! எட்டு மணிக்குன்னா சில நேரத்துல பிரேக்குக்கு கூட வேலை இருக்காது , ஆனா இன்னைக்கு அந்த பிரேக்குக்கு வேலை ரொம்ப கம்மி தான் , கொஞ்சம் கொஞ்சமாக கடந்ததால், அப்போது கூட டென்ஷன் இல்லாமல் எங்கே ஓட்ட முடியுது, கொஞ்ச கேப் கிடைச்சு வேகமா ஓட்டலாம்னு பார்த்தால், அப்போதான் ஒரு ஆட்டோ ரைட்(ride?) போவான் , ரைட் போறதுன்னா சவாரி இல்லாம என்ன பண்ணுறதுன்னு தெரியாமல் , வேகமா போயிட்டா சவாரி மிஸ் ஆயிடுமே என்கிற கவலை , மெதுவா போனால் வேற எவனாது பிக் பண்ணிடுவாங்குற கவலை , அவன நாம முந்துறதுன்னா ரொம்ப சிரமம் , பார்க்குறதெல்லாம் சவாரியே தெரியுமோ என்னமோ , வலது இடது , இடது வலது , வேகமாக மெதுவா, மெதுவா வேகமாக , அவன முந்துறதுக்குள்ள இருக்குற பாடு இருக்கே அவனுக்கு சவாரி கிடைச்சு முந்துனா, திரும்பி பயங்கரமா ஹாரன் சத்தம், வண்டியில பிரேக் புடிக்குறாங்களோ இல்லயோ! அவனே தான் , இப்போ சவாரி இறங்கும் வரைக்கும் கண்ணுமண்ணு தெரியாது , வழி விடாட்டி , காது கீய்ஞ்சுடும்(எனக்கும் தொத்திகிட்டா?) , வழி விட்டு திருப்பியும் அதே கதைதான், ஆமாம் ஊருல என்ன ஒரே ஆட்டோவா ஓடுது, அதுல வேற ஷேர் ஆட்டோன்னு ஒண்ணு, அவனுக்கு நாலு சில சமயத்துல அஞ்சு ஆள் கிடைக்கும், அது வரை ரைட் தான் அது, என்ன ஆட்டோல மூணு பேருன்னு லாஜிக் எல்லாம் கேட்க கூடாது, டிரைவர்க்கு ரெண்டு சைட் இல்ல ஒரு சைட் யாரையாச்சும் உட்கார வச்சுக்கிட்டு, பேலன்ஸே இல்லாம!

ஓட்டுனர்கள் தான் பிரச்சனை தான் பார்த்தா ஓடு பாதை அதற்க்கு மேல, நடு ரோட்ல ஒரு குளம்(குளம் சரி அல்ல குட்டை? )அதை அவாய்ட் பண்ணுறதுக்காகவே ரைட்ல போனால் அந்த பக்கமும் ஜாம் , இந்த பக்கமும் ஜாம் , எப்படா ரோட் ப்ரீ யாகும்னு எரிச்சல், கொஞ்சம் நூல் புடிச்சாப்ள மிவேகத்துல போயிண்டே(இது வேறயா?) இருந்தா, தீடீர்னு பார்த்தால் ஒரு வேகத்தடை முளைச்சு(கவிதை , கவிதை) இருக்க, ஒரு எல்-போர்டு வண்டி அதுல, அதுக்கு மேல அதை எழுதவா வேணும்(குறைஞ்சு போய்டுவியா? சரி சரி), குடிகாரன் கூட வேகமா சாலைய கடந்து விடுவான் போல(அடடே உருவகம்)!

இதையெல்லாம் தாண்டி முக்கியமான சாலைக்கு (மெயின் ரோட்?) வந்துவிட்டால் , முக்கிய பிரமுகர்கள் போற சாலை, குழி எல்லாம் இருக்காதுன்னு எதிர் பார்க்க முடியாது, ஆனால் குட்டை இருக்காது, ஆனால் ஆங்காங்கே சிகப்பு விளக்கு தடை(அட) வேற , அது இல்லாட்டி கூட எல்லாரும் போயிடலாம் போல, அங்க நின்னு புறப்பட்டோம்னா, தேக்கி வைச்ச தண்ணி போல ஒரே பாய்ச்சல் தான்(அணை ஞாகம் வருது –அடக்குடா அரசியல் வேணாம்), எங்க எங்க இடைவெளி இருக்கோ அங்கெல்லாம் கண நேரத்தில் நிறைஞ்சுடும், இதுல வேற மேன் பவர்ல(கூகிள்: சைக்கிள்க்கு ஹார்ஸ் பவர் இருக்க என்ன?) இருந்து பல நூறு குதிரை பவர்(Horse power) வரைக்கும் எல்லா வேகத்திலும் சங்கமித்து, அதனிடையே நம்ம வண்டியை முடுக்கி(கண்டிப்பா இடுக்கி இல்ல) ஒரு வழியா ஒரு ஐம்பதைத்தொட்ட சந்தோசத்துல , ஆட்டோ காரன் , எல் போர்டு, எல்லாம் மறந்து என் மீது மோதும்(என்னைத்தீண்டும்?) காற்றை ரசித்த படி, ஒரு பாடலை முணு முணுத்து , இனிமே எப்போதும் மறக்க முடியாம ஒண்ணு நடக்கும்னு யாரு எதிர் பார்த்தா? தீடீர்னு சத்தம் , முன்னால போன வண்டியில மோதி , ஒரு பைக் அப்படியே 90 திரும்புது, பரதேசி காதுல ஒரு காஸ்ட்லியான ஹெட் போன், தலையில ஹெல்மெட் இல்ல,, பதற்றத்துள்ள ஆக்ஸிலரேட்டரை ஒரு முறுக்கு முறுக்கி பிரேக்கை இயக்கினால் தலை மேல ஏறித்தான் நின்னுச்சு , மேலும் பதற்றம் அதிகரிச்சு , ஆக்ஸிலரேட்டரை தவிர எதுவும் தெரியாம, திரும்பி பார்க்காமல், ஆஃபிஸ் வந்து சேர்ந்து மணி பார்த்தால் பதினொன்று பத்து !

இதை எந்தவி உணர்ச்சியும் இல்லாமல் , படித்த ஒருவர் , ஜட்ஜ் இடம் பாஸ் செய்ய , அரசு தரப்பு வக்கீல் , இது உங்க டைரி தானே , 4567 உங்க பைக் தானே என்றார் ?

Tuesday, December 20, 2011

பெருந்துயரம்

புரண்டு புரண்டு படுத்து இருந்தேன்

துயரம் நீங்கவில்லை தூக்கம்

இன்னுமில்லை!

காலங்கள் பல கடந்தன

நாடகங்கள் நடந்தேறின

தூங்கி தூங்கி எழுந்திருந்தேன்

காலை வந்தது கனவது கலைந்தது

காலவெளி அங்கில்லை! கண்முன்னே

பல மணித்துளிகள் அத்துயரம்

இப்போதில்லை மறு உறக்கம்

வரும் வரை அரங்கேறுவது

எத்தனையோ!

ஓர் உறக்கம் கழித்து

தொக்கி நிற்பவை சில

நினைவுகளே !

பேருறக்கம் வந்து

பெருந்துயரம் நீக்குமோ

காலவெளி துவுமின்றி

கனவுமின்றி நினைவுமின்றி

நட்சத்திரமாய் மாறி

பேரானந்தத்தில் திளைத்திருக்க!

Monday, December 12, 2011

தலீவா

சார் பாஸ் போல தான்
பார்ப்பவரை எல்லாம் தலீவா
என்றவன் விளிப்பான்
தலீவா தலைமை தாங்கியதும்
இல்லை அவன் தலைமையை
ஏற்றதுமில்லை !

Tuesday, December 06, 2011

Usuals

Barking dog

parked car

three leg pose

alarm wentoff

man ran toward

bomb blasted

blood splashes

dog barked!

------------------------------

(or) அல்லது

குரைக்கும் நாய்

நிற்க்கும் கார்

மூன்று காலில்

எச்சரிக்கை மணி

ஓடி வந்தவன்

வெடித்தது

சிதறியது

நாய் குரைத்தது!

========================

(அல்லது )

குரைக்கும் நாய்

குரைக்கும் முன்பு

கூவிய கார்

ஓடி வந்தவன்

வெடித்து சிதறினான் !

Tuesday, November 29, 2011

கறை நல்லதூ ?

One drop , two drops here and there!
No one minds to enjoy that !
A fast moving pulsar crossed;
Load of water splashed on me!
I shouted "buy me surf excel" !
the guy turned back and shows his finger!
when he drives back, hell of sound!
my shirt color changed once more !
Surf excel can you remove this strain ?

Friday, November 25, 2011

இலவசம்

வாக்கு கொடுத்து விட்டேன்

மீள முடியவில்லை

இலவசங்கள் எப்போதும் வறுமை

கோட்டிற்க்கு கீழே தான்

எப்பாடு பட்டாலும்

எல்லா அத்வாசிய தேவைகளின்

விலையை ஏற்றியாவது

நிறைவேற்றிவிடுவேன்

அனைத்து இலவசங்களையும் !

கவலை பட வேண்டாம் அடுத்த

தடவை உங்களுக்கும் இலவசம் !

Tuesday, November 08, 2011

அவைகள் நம்மை பார்ப்பதில்லை!

அவைகள் நம்மை பார்ப்பதில்லை!
பகலில் மறைந்து இருக்கலாம்
எங்கும் பரவி இருக்கலாம் இரவில்
எண்ணிக்கையில் அவ்வப்போது குறையலாம் கூடலாம்
தேடினாலும் கிட்டாமல் போகலாம்
ஆனாலும் நாம் தான் இருப்பை நிறுவி கொண்டு இருக்கிறோம்
ஆம் அவைகள் அவைகளையே பார்ப்பதில்லை !

தீபாவளி

வழக்கம் போல தான்
மற்றுமொரு தீபாவளி
தட்கலில் டிக்கெட் புக் பண்ணி
அவசரமாய் பேக் பண்ணி
பார்ப்பவ்ர்களுக்கெல்லாம் வாழ்த்து தெரிவித்து
எதற்காக கொண்டாடுகிறோம்
ஏன் கொண்டுகிறோம் என அங்கலாய்த்து
வெடி வெடிக்கலாமா வேண்டாமா என்ற
வாதத்தில் பங்கேற்று ஊருக்கு வந்து
சேர்ந்தால் ,அடுத்த வீட்டில்
பொங்கலுக்கு
கண்டிப்பாக புது டிரஸ் வாங்கி தருகிறேன்
என்று கெஞ்சி கொண்டிருக்கிறார் அழுது
புரளும் மகனிடம் தந்தை
வழக்கம் போல தான் !

மழை காலம் - 2

ஆஜர் ஆஜர் ஆஜர் என்று
கூவிய அடுத்த நொடி
கண்கள் பொய்த்திட
இரைச்சலுடன் வந்து
நின்று இடியாய் அலறியது
யாரது காணாமல் போன சாலைக்கு
நான் காரணம் என்று FIR போட்டது என்று !


----------------------------------------

தடுக்கி விழுந்தால்
அகல பாதாளம்
மழை என்ன மலையா பெய்தது ?



மழை காலம்


அலுவலகம் நுழைந்ததுதான் தாமதம்
ஏன் இந்த மழை பெய்கிறது என்றான்
ஏன் என்றேன்
குண்டும் குழியான சாலைகளில்
நிமிடத்திற்க்கு ஒரு முறை கியர் மாற்றி
மழையில் நனைந்து கொண்டே
வாகன நெரிசலில் ஊர்ந்து வருவதற்க்குள்
உயிரே போய் விடுகிறது என்றான் !
குண்டு மழையில் நனைந்து
அடுத்த அடியில் கால் போகுமோ கை போகுமோ
என ஓடி உயிர் பிழைத்து வாழ்கிறார்களே
அவர்களின் நிலை நினைந்து இருக்கிறாயா என்றேன் ?
எல்லாம் அவன் வழி என கை உயர்த்தி
தலை கோதி நின்றான் !
காபி என்றான் கண்டிப்பாய் என்றேன்!

Wednesday, July 27, 2011

கடற்பா

அலையை பார்த்து பயப்படும் யாவரும் கடலை பார்த்து பயப்படுவதாய் தெரியவில்லை !

கடலை போடும் விடலை இருக்கும் வரை கடலை விற்கும் சிறுவனும் இருப்பான் !
பேரலைகள் எழுப்பும் சப்தமும் மனித அலைகளின் சப்தமும் சண்டை போடும் இடத்திலும் அமைதி எங்கே ?

மணல் கொள்ளை நடக்கும் ஆற்றங்கரையில் காவலரை காணோம் கடற்கரையில் என்னத்தை இவங்க கிழிக்குறாங்க ?

அலையோடு ஆடி கால் நனையாமல் கரையேறினால் இன்னும் அலை வந்து வந்து சென்று கொண்டிருக்கிறது அப்போ நான் வெற்றி பெறவில்லையா ?

எல்லை மீறி அலைகள் அவ்வப்போது வந்தாலும் எல்லை மீறுவது அவற்றுக்கு தெரியுமோ ?












Tuesday, July 26, 2011

சொற்பா


1. சொல் வார்த்தை வாக்கு இவைமூன்றும்
வேறல்ல என்பர் அன்பர்

2. மழலை சொல் வாய் வார்த்தை
உயர்ந்தோர் வாக்கு ஏழு

3. சொல் செய் சொல் செய்யாதே
சொல்லாதே செய் சொல்லாதே

4. தமிழ்சொல் இங்கிலிஷ்சொல் ஆங்கிலம் இங்கிலிஷ்சொல்
ஆங்கிலம் தமிழ்ச்சொல் undefiened

5. சொல் சொல் சொல் அர்த்தமற்ற
சொல் அர்த்தம் சொல்

6.இளித்து பேசுவது இன்சொல் இழிந்து
பேசுவது வன்சொல் சொல்

7.ஏனிந்த சொல் ஏனிந்த வார்த்தை
ஏனிந்த வாக்கு சொல்

Thursday, April 28, 2011

கதம்பம் 7

இயலாமையால் வருவது
ஆத்திரமும் அழுகையும்
அதை ஆணுக்கொன்றும்
பெண்ணுக்கொன்றும் பிரித்ததுதான்
சமூகத்தின் முதல் பிரிவினையோ


******************************************************


என்னை சண்டைக்கோழிகளும்
சமாதான புறாக்களும் சமமாகத்தான்
காயப்படுத்தி உள்ளன - வரலாறு



கதம்பம் 3

ஆள்வதற்கு நரி போதும்
நாய்கள் வாழும் காடு!


&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&


வீட்டு நாய்க்கு
சுதந்திரம் கொடுத்தால்
நாலு தெரு கூட
தாண்டாது !

கதம்பம் 4

அவை ஒழுங்காக நின்றன
ஒன்றையொன்று ஈர்த்தும்
ஒன்றையொன்று விலக்கியும்
அவற்றில் ஒன்று தான்
பெருதென்றெண்ணி விலகி சென்றது
இப்பொழுது அவைகள் தான்
தான் என்று ஈர்த்தும் விலகியும்
விலகியும் ஈர்த்தும் தன்
பயணத்தை தொடர்கின்றன
அவற்றில் ஒன்று தான்தான்
எல்லாம் என்று ஆகும்
வரை இது தொடரும் !


----------------------------------------------------------


மௌனங்கள் சொல்லாததை
சொல்ல முனைந்திட்ட
வார்த்தைகள் மௌனித்து
நின்றன !

கதம்பம் 6

தினம் தோறும் சீரியல்
பார்ப்போர் வருஷம் தோறும்
கிரிக்கெட் பார்ப்போர்
அரை மணிக்கொரு நேரம்
கட்சி நியூஸ் பார்ப்போர்
இவர்களெல்லாம் தற்கொலை
செய்து கொள்வாரோ ஒரு வாரம்
இடியட் பாக்ஸ் வேலை செய்யலேன்னா?


---------------------------------------------------------------------------------



தினம் தினம்
விழிக்கிறேனா
தூங்குகிறேனா
தூக்கத்தில் இருந்து
விழிக்கிறேனா விழிப்பில்
இருந்து தூங்குகிறேனா
தூக்கமும் விழிப்பும்
இல்லாத ஒரு நிலையில் ....


--------------------------------------------------------

கதம்பம் 5

வார்த்தைகளால் வாதிடலாம்
வாள்களினால் போரிடலாம்
வரலாற்றில் இடம் பெறலாம்
ஆனால் அக்கேள்விக்கு விடை
இல்லை விடை தேடியவர்களே
வரலாற்றில் - விடை தெரிந்தவர்களை
வரலாறு மறைத்துவிட்டதோ ?

#####################################


புரிந்த மாதிரி பேசிகொண்டிருந்தார்கள்
எல்லாருக்கும்
புரியாமல் பேசி கொண்டிருந்தார்கள்
அவர்களுக்கே
அவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள்
புரியாத மொழியில்


#########################################

பரமபிதா கூறாததையா
தேசபிதா கூறினார் ?
அவர்கள் அணுகுண்டு வீசுகிறார்கள்
ஆயுதம் ஏந்துகிறார்கள் இவர்கள்
அஹிம்சை அஹிம்சை என
இம்சை செய்கிறார்கள் !


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


வறுமையை உண்டு பண்ணுபவர்களே
வறுமை கோட்டையும் உருவாக்கிறார்கள் !
இலவசத்தை அறிமுகப்படுத்துபவர்களே
இல்லாமையையும் உருவாக்குகிறார்கள் !
வாக்கு அளிப்பவர்களே
வாழ்க்கையையும் அழிக்கிறார்கள்!


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


தினந்தோறும்
நடந்து செல்கிறோம்
யுகம் தோறும்
கடந்து செல்கிறோம்
தினமொரு யுகமாய்
யுகமொரு தினமாய்
எதை கடந்து !
எதை நோக்கி!
கடந்து செல்கிறோமோ?
அடைந்து கிடைக்கிறோமா


கதம்பம் 2



ஒற்றை மாட்டு வண்டியில்
பயணம் - மாடாய்
வண்டியோட்டியாய்
வண்டியாய் பயணமாய் !
+++++++++++++++++++++++++++++++++++++++++++++

கி. பி 2250

2011 ல் உருவாக்கப்பட்ட குறுந்தகட்டில் மோதி திரும்பிய ஒளி சிதறலொன்று ....
கிரிக்கெட் ஆடினால் நாட்டில் பஞ்சம் தீரும் என்றொரு மூடநம்பிக்கை.....

***********************************************************************************************************


இங்கு இவை இருக்கும்
இருந்து கொண்டே இருக்கும்
இருக்கும் வரையில் இருக்கும்
இல்லாவிடினும் இருக்கும்...


இங்கு இவை இல்லை
இல்லாத பொழுது இல்லை
இருக்கும் பொழுதும் இல்லை

இல்லை இல்லவே இல்லை
இருக்கு இருக்கவே இருக்கு !

--------------------------------------------------------------------------------------------


தலை எழுத்தை நம்புபவன்
அது மாறும் என்றும்
நம்ப மாட்டான்
இன்று மட்டும் மாறி
விடவா போகுது
முடிகிறது ஒரு கூத்து
இதில் எவன் வென்றாலும்
தோற்றாலும் மாற்றம்
ஏதுமில்லை !

=================================================

வாய்வித்தைகாரர்கள் அவர்கள்
வீதி தோறும் கை அசைத்து
உழைப்பவனின் வரி எல்லாம்
உழைக்காதவனுக்கே இலவசம்
என்று பிச்சை கேட்பார்கள்
நீங்கள் வாக்களியுங்கள் அவர்கள்
வாக்கை அழிப்பார்கள் !

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

கொசு பறக்கும்போது ஏற்படும் சத்தம் அதன் இருப்பை காமித்து கொள்ளத்தானோ ?


%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

பிச்சைகாரர்களை திருடர்களே
ஆள்வார்கள்!!!


^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^


ஏன்னு தெர்ல
எதுக்குன்னு புர்ல
எப்படின்னு வேணா முடியும்
ஆனா எப்படி வேணும்னாலும் ?


$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$


தே.அ
திருட்டு மற்றுமல்ல ஊழல் கூட தொழில் என்று சங்க இலக்கியத்தில் மாற்றம் செய்யப்படும்!