Tuesday, October 30, 2012

மொழி மாற்றம் - மற்றுமொன்று


பரமபிதாவே உனக்கு என்னை தெரியும் என்னைவிட 

எனக்கு வயது ஏறுகிறது ஒருநாள் கிழமாகிடுவேன்


என்னை இந்த சிந்தனை துன்பத்திலிருந்து விடுவி 
நான் எல்லா விசயங்களிலும் நிகழ்வுகளிலும் ஏதாவது சொல்ல வேண்டியதுள்ளது 

மற்றவர்களின் தின நிகழ்வுகளை சரிப்படுத்தும் ஆசையிலிருந்து விடுவி 
சிந்தனை வயப்படுத்து உற்சாகத்தை இழக்காமல், உதவும் மனப்பான்மையை கொடு அதிகாரமில்லாமல்!

இந்த ஞானக்கடலை வைத்துக்கொண்டு உபயோகமில்லாமல் என்ன லாபம்?
எல்லாம் தெரிந்தவனே , பரமபிதாவே, கடைசியில் எனக்கு சில நண்பர்கள் வேண்டும் 

என் மனதை தெளிவுபடுத்து இந்த முடிவில்லா விபரப்பட்டியிலலிருந்து;
கரையை அடைய செய் !

என் வலிகளுக்கான முணுமுணுப்பை நிறுத்த முற்படுகிறேன். அதிகமாகிறது,கட்டுபடுத்துவது இனிமையாகிறது வருடங்கள் செல்ல செல்ல !

I have tried to translate one poem.. at first it seems to be simple poem.. easy to understand.. when try to translate it not seem to be easy to translate... stopped in the midway.. let me come back on another day ;-)



Translated from below , referenced by http://kadugu-agasthian.blogspot.in/2012/10/blog-post.html


17th Century Nun's Prayer

Lord, thou knowest better than I know myself
that I am growing older and will someday be old.

Keep me from the fatal habit of thinking
I must say something on every subject and on every occasion.

Release me from the craving to straighten out everybody's affairs.

Make me thoughtful, but not moody: helpful, but not bossy.

With my vast store of wisdom, it seems a pity not to use it all,
but thou knowest, Lord, that I want a few friends at the end.

Keep my mind free from the endless recital of details;
give me wings to get to the point.

Seal my lips on my aches and pains. They are increasing,  and love of rehearsing them is becoming sweeter as the years go by.

I dare not ask for grace enough to enjoy the tales of other’s pains,
But help me to endure them with patience.

I dare not ask for improved memory,
but for a growing humility and a lessening cocksureness
when my memory seems to clash with the memories of others.
Teach me the glorious lesson that occasionally, I may be mistaken.

Keep me reasonably sweet; I do not want to be a saint -
some of them are so hard to live with –
but a sour old person is one of the crowning works of the devil.

Give me the ability to see good things in unexpected places,
and talents in unexpected people.

And, give me, oh Lord, the grace to tell them so.

Amen. 

Monday, October 29, 2012

மொழி மாற்றம் !

உன்னை துகள்களாய் நொறுக்க முடியும் ...
தொலைந்து போன துகளே
நீ தேட ஆரம்பிப்பாய் ... தேட .. தேட. ...
அடையும் வரை .. நீ துகளே ...
அடைந்த பிறகு முழுமையே !



Translated From following..

I can break you into pieces. There will be missing piece.
That you search for .. search for.. search for....
until you find ... you are the piece...
once you find...you are the whole..

Friday, October 26, 2012

சித்திரம்

விசித்திர சித்திரம்
விரிந்ததே
சித்திரம் ஒன்று
நகர்வதை
சித்திரம்
பார்க்கிறது !

fly in the face - review

நேராக விமர்சனத்திற்கே சென்று விடலாம் . முதல் காட்சியே லாங் ஷாட்டில் தொடங்குகிறது , கிட்டே வர வர என்னடா பிளாக் அண்ட் ஒயிட் படமா என்று யோசிக்கும் முன்பே , முகத்தில் மொய்க்கும் ஈ கலரில் காமிக்கப்படுகிறது. அது மொய்க்கும் உயிரில்லா உடல் , கருப்பு வெள்ளையில்... லைஃப் இஸ் கலர்ஃபுல்ன்னு சொல்ல வராறோ டைரக்டர்....சிதறி கிடக்கின்றது உணவு பொட்டலம்...பாதி குடிக்கப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில் ஒன்று திறக்கப்பட்ட .. ரயில்வே ஸ்டேஷன் ஓரமாக .. இவையெல்லாம் முடிந்து ... அடுத்து வரும் சில நொடிகள் சம்பிரதாயமான காட்சிகள் ... போலீஸ் வருவது , போஸ்ட் மார்ட்டம் பண்ணுவது....

அவன் ஒரு பிச்சைக்காரன் என்பதும், அவன் விஷம் அருந்தி இறந்திருப்பதும் அறிந்து அந்த விஷயம் முடிவுக்கு வருகிறது ... சில நேரம் கழித்து மற்றுமொரு சம்பவம் ..இதே மாதிரி மற்றுமொரு இடத்தில் நடந்தேற ..ஈக்கள் , பிணம் , விஷம் , பிச்சைக்காரன் .. என  தொடர் கொலைகளா மாறி விடுகின்றது .... இதற்கிடையில் , இந்த விஷயம் பத்திரிக்கைகளில் வெளி வந்து ... மனித ஆர்வலர்கள்  , பிச்சை காரர்களை அரசாங்கம் கவனிக்கவில்லை என்று போராட்டம் ஆரம்பிக்க....

ஆஹா.. இந்த படத்தின் genre இப்பொழுது சமூக பிரச்சனைகளாக மாறுகிறது.. மேலும் இந்த காட்சிகள் ஒரு டாக்குமெண்டரி போல , டிஸ்டிரிக்ட் -9 ல் வருவது போல காட்டப்படுவதால்..  அது , இப்படத்திற்க்கு வேறொரு கோணத்தை தருகிறது ...

மாறி மாறி விசாரணையும் , போராட்டங்களும் ஆரம்பித்து .... அரசாங்கம் கவனிக்க கடைசியில் , மரணங்கள் நிகழாமல் இருக்கின்றன .. கொலைகாரன் பிடிபட்டானா? அவன் ஏன் கொலை செய்தான்  ?  fly in the face டைட்டில், நம் சமுதாயத்தின் மீதும் மொய்க்கும் ஈக்கள் பிச்சைக்காரர்கள் என்பதை உணர்த்துகிறதா?
என்பதை வெள்ளித்திரையில் வந்தால் பார்த்து கொள்ளுங்கள் ..



Monday, October 22, 2012

குறுஞ்சிறு கதைகள்

மழை
 பெய்யென பெய்த மழை , cut சொன்னவுடன் நின்றது

கண்ணாடி
  உடலை பார்த்து கொண்டிருந்தேன் . உயிரில்லா என் உடலை !

பிடிக்குமா?
  உன்னை எனக்கு மிக பிடிக்கும் என்றேன். எனக்கு பிடிக்காது என்றாள். இரண்டு பொய்கள் .

புகைப்படம்
  இப்போதெல்லாம் பார்க்கும் புகைப்படங்கள் எல்லாம் என் மூஞ்சை தொடுகின்றன... ஆளில்லை .

தீவுகள்
 கடலால் அல்லவா தீவு பிறக்கும்.. கடல் குழந்தையாலும் தீவு பிறக்கிறது ...

கெட்ட வார்த்தை
  மூன்றெழுத்து கெட்ட வார்த்தை சொல்லவா....பீப் .....பீப்...வார்த்தை இசையானது..


Friday, October 12, 2012

அவன்

அவனை பற்றி ஒரு வரியில் சொல்லிவிடலாம்... அறிவாளி... எதையும் உன்னிப்பாக கவனிக்கும் ஆற்றல் அவனுக்கு கைவந்துள்ளது என்பதை அவன் பேசும் பேச்சிலே அறிந்து விடலாம்...

எங்கு என்ன பேசினாலும், வீட்டில் , தெருவில் , எங்கு என்ன பேசப்படுகிறதோ , ரகசியமாக பேசப்பட்டாலும் கூட அறிந்துகொள்ளும் கூர்மையான காது வேறு....

கூர்மையான காது மட்டுமா நீளமான வாயும் தான் ... எல்லா இடத்திலும் எல்லாம் பேசிக்கொள்(ல்லு)ளும்  ... ஒருவர் சொன்னது அவர் வார்த்தையாக மாற தொடங்கும் .. உதாரணமாக சொன்னோமானால், நம்ம ஏரியாவில் இது ரொம்ப மலிவு , அந்த ஏரியாவில் அது ஜாஸ்தி என்று யாரிடமாவது ஒருவர் சொல்ல அது அவரிடமே அரை நாளில் திரும்பி வரும் வேறொருவர் மூலமாக.. சில நேரத்தில் அவனை விட இவனிடம் அதை சொன்னவன் அறிவாளியாக மாறி இருப்பான் .. அறிவு என்பது அறிந்து கொள்வதுதானே..
இதெற்கென்ன, ரிஷி மூலம் , நதி மூலமா பார்க்க முடியும் , எல்லாம் எல்லாவற்றிக்கும் பொது தானே ....

எவன் மூலமாக எது எங்கு சென்றால் என்ன , எல்லாம் எங்கும் செல்ல வேண்டியதுதானே முக்கியம் என்று சொல்லலாம்.. ஆனாலும் .. எல்லாம் எங்கும் பகிரப்பட்டு விடுவது சில நேரங்களில் பிரச்சனையை உண்டு பண்ண கூடும்... அது மாதிரி சில பிரச்சனைகள் சமாளிப்பது கடினமாக மாறியது...

      இதற்கு தீர்வாக சில விஷயங்கள் , பலரிடம் பகிரப்பட்டது , அவன் அப்படித்தான் எல்லாரிடமும் உளறுவான் ... அவன் ஒரு பைத்திய திசையில் சென்று கொண்டு இருக்கிறான் என்றும் அவனை கண்டு கொள்ளாதே என்றும் .. பார்ப்பவர்களிடம் எல்லாம் கூறப்பட்டது ... 

இது மட்டும் அவன் காதுக்கு எட்டாமலா போகும்.. இப்போது அவன் அவனை பைத்தியம் என்று எல்லாரிடமும் சொல்ல. அவன் பைத்தியம் என்று பலர் இவனிடம் வந்து சொல்லுகின்றனர்....


Thursday, October 11, 2012

லூப்பர் - 1

எத்தனை பாடல்கள் கேட்டு இருப்பேன்.. எத்தனை பாடல்களை எத்தனை முறை கேட்டு இருப்பேன் .. கணக்கு ஒன்று இருக்கிறதா எனில் இல்லை தான் என்று சொல்ல வேண்டும்... நான் கேட்ட பாடலில் எந்த பாடல் முதல் பாடல்.... தாலாட்டா.. அல்லது அதற்கு முன்னே பாடல் கேட்க ஆரம்பித்து விட்டேனா? 


எதுவும் ஞாபகம் இல்லை.... நான் அறிந்ததில் இருந்து சின்ன குழந்தையில் அடிக்கடி முணுமுணுக்கும் பாடல்... என்று என் பெற்றோர்கள் சொல்வது.. "மானே தேனே கட்டுபிடி " உதய கீதப்படபாடல்...ஆனால் நானாக விரும்பி அடிக்கடி கேட்டது இந்த படத்தின் மற்றுமொரு பாடலை .. .அது ..சங்கீத மேகம்  ..இந்த பாடல் பிடிக்க முக்கியமான காரணம்.. யெஸ். யெஸ். பி யும் .. மற்றும் இந்த வரியும் ....

போகும் பாதை தூரமே வாழும் காலம் கொஞ்சமே !

பட்டியல்கள்...

பட்டியல்கள் இடலாம் எனில் எதை பட்டியலிடுவது... எதை எதை பட்டியலிடாம்.. எதை எதை எதை பட்டியலிடலாம்... என்று ஒரு பட்டியலை முதலில் இடலாம்... பிடித்ததை, பிடிக்காததை , ரசித்ததை, ரசிக்காததை, புசித்ததை,உண்மையை , பொய்யை.. கற்பனையை ,.. இப்படி பட்டியலிடலாம்..

பட்டியல்களுக்கு மௌசு சேர்க்கலாம். எனில் புத்தகங்களையோ.. இசையையோ ... பார்த்து ரசித்த படங்களையோ பட்டியல் இடலாம்..ஆம் ஆம் என்று சொல்வதை காட்டிலும் .....இதோ ...


1. லூப்பர் ... (லூப்பிலிட்ட பாடல்களின் தொகுப்பு )
2. டர்னர் ... ( திருப்பி சென்ற பக்கங்களுக்கான சொந்தம் கொண்டாடும் புத்தகங்கள் )
3. கண்ணாமூச்சி ( என் கண் முன்னே கண்ணா மூச்சி நடத்தி சென்ற படங்களின் தொகுப்பு .... ).....

இன்னும் எத்தனையோ பட்டியல்கள் இடலாம்.. ஆம்... 

புகை வண்டி நிலையம்

இந்த வீதியை கடக்கையில் தான் எத்தனை வியப்புகள்... சர்வ சாதாரணமாக நாம் அனுதினமும் நடக்கும் இந்த வீதி.. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவத்தை விட்டு செல்கின்றது என்பதில் மறு சிந்தனை ஏதுமில்லை....

எத்தனை முகங்கள்.... எத்தனை கனவுகள் ... வெறுப்புகளோடு சிலர் ....கூவி கொண்டிருந்தனர்.. அதை கடுப்புடன் கடந்து செல்வனுக்குத்தான் எத்தனை வெறுப்பு.... இன்று கூட கடந்து செல்கையில் குமரியின் குரல் "இதை நான் சினிமாவில் தான் பார்த்து இருக்கேன் " , இவ்வளவு கூட்டம்....என்னமோ திருவிழா மாதிரி அல்லவா இருக்கிறது.... தேர் மட்டும் தான் இல்லை... சில நேரங்களில் மனிதக்கூட்டம் இந்த நிலையத்தை இழுத்து கொண்டிருக்கும் வடம் போல்...ஆனால்... நிலையம்தான் மக்களை இழுத்தும் , உமிழ்ந்தும் கொண்டு இருக்கிறது ...

காவலாளி ஒருவன் உணவருந்தும் ஜோடியை துரத்தி கொண்டு இருக்கிறான்.. அவர்கள் வீடில்லாதவர்களாக இருக்கலாம்.... இருந்தும் இங்கு வந்து அமர்ந்திருக்கலாம் .. தெரியவில்லை..ஆனால் ... கம்பீரமான காவலாளி ஒரு கனிவுடன் ... சாப்பிட்ட பிறகு காலி பண்ணி விடு.. இல்லையேல் என் மேலதிகாரி என்னை திட்டுவான் என்று கூறி கொண்டு இருந்தான். .. அவன் அவனவனுக்கு ஒவ்வொரு கவலை.... எனக்கென்ன கவலை... நான் இழந்து இருக்கிறேன்... எத்தனை மாற்றங்கள்... ஒவ்வொரு மாற்றத்திலும் பலம் கூடியதாக இருக்கிறது..... நான் விஸ்தாரமாக்கபட்டு இருக்கின்றேன்....
பலத்தை சோதிக்க இவர்களும் பெருகி கொண்டே இருக்கின்றனர்... அவன் சொல்லுகிறான் .... இவர்களை நான் உமிழ்ந்து கொண்டு இருக்கின்றேன்.... இல்லை நான் பாரம் தாங்காமல் அவர்களை தூக்கி எறியதான் பார்க்கிறேன்... ஆனால் இவர்கள் நத்தை போல் ஊர்ந்து செல்கின்றனர் ... முன்னாள் ஒருவன் புகை எரிந்து விட்டு கடந்து செல்லுவான்.. நான் நிறம் மாறத் தொடங்குவான்..இவன் இப்பொழுது .... என் மேலும் .. எனக்கு மேலும் ... கயிறு கட்டி செல்லுகின்றான்..  இவனின் சத்தம் கூட மாறி விட்டது...

ஆதியிலே நான் இவனை
சில முறை தான்
பார்ப்பேன் அனுதினமும்...
ஆனால்.. இப்பொழுது நிமிடத்துக்கு
ஒருமுறை கடந்து செல்கிறான்
என் மீது அதிக பாரத்துடன்...
என்ன சொல்லுவது...
அவன் சொன்னது போல
இவன் என் மேல் உமிழ்ந்து செல்கிறான்...
ஒருவன் துப்பி செல்கிறான் ...ஒருவன்
அழுது புரள்கின்றான்.... ஒருவன் என்னை
கண்டும் காணாமல் ஓடி செல்கிறான்
அவனை கண்டு...நான் கண்டும் காணாமல் ..
இருக்கிறான்....

இவர்களின் பயணம் தொடரும் வரை என் பயணம் தொடருமா?


திரும்ப படிக்கவும் - 3

சக்தி வாய்ந்த யானை ஒன்று சிறிய இரும்பிகயிற்றுக்கு பயந்து நிற்பது போல் நின்று கொண்டிருந்தன ... சக்தி வாய்ந்த இயந்திரங்கள் ...சிறிய சிகப்பொளிக்கு அஞ்சி ..... நேரம் மெதுவாக கடந்து கொண்டு இருந்தது நொடி காட்டி ஒன்று ரெடி செய்து கொண்டு இருந்தது... நகரத்து சாலை ஒன்றில் ... சுற்றும் முற்றும் பார்த்து ...மரத்துக்கு நீர் பாய்ச்சி கொண்டு இருக்கும் யுவன் ஒருவன்... கண்கள் நர்த்தனமாட முன்னால் அமர்ந்திருப்பவனுக்கு காதில் விழுமே இல்லையே என்றொரு கவலை இல்லாமல் .. .கதைத்து கொண்டு இருந்தால் யுவதி ஒருத்தி ....நீர் பாய்ச்சியவன் ... மூன்று நொடிகள் இருக்கும் நேரத்தில் பாய்ந்து வந்து வண்டியை முடுக்க ஆரம்பிக்க... பொறுமையில்லாமல் ... அனைவரும் முடுக்க...அனைவரும் முடுக்க ஸ்தம்பித்து நின்றது சாலை... வெள்ளை சீருடை அணிந்தவர் ... விளக்கை அணைத்து ...விசில் ஆரம்பித்து இருந்து இருந்தார்.. பேருந்து ஓட்டுனர் .. முடுக்க ஆரம்பிக்க வண்டி திணறி திணறி சென்று கொண்டு இருந்து இயந்திரத்திரலில்.. எந்த வித பதற்றமுமின்றி ... எதையும் கவனிக்காமல் கடலை போட்டு கொண்டு இருந்தனர் இருவர் ... அவன் என்ன சொன்னாலும் ஒரு நீண்ட சிரிப்புதான் இவள் கேட்டு கொண்டு இருந்தால்... இவள் சிரிக்கும் முன்னே அவன் சில நேரத்தில் ஆரம்பித்து கொண்டு இருந்தான் ...என்ன வழக்கம் போல தான் இவர்கள் பேசும் .. என்ன வழக்கம் என்றும் ஆராயும் நேரத்தில் .. இங்கு வந்திருப்பீர்கள்... இங்கு எப்போதும் யாருக்கும் நீங்கள் பெயர் வைக்க வேண்டியது இல்லை.. .. இவன் பெயர் R. அவன் பெயர் S . இவனும் அவனும் செல்லும் இடம் P. அவர்கள் சென்ற போது சந்தித்த நபர்கள் X, Y. அவர்கள் செல்லும் வழியில் பயணம் செய்தது T மற்றும் B... அவர்களில் வாக்கு வாதம் வந்து X , R ஐ அடிக்க Yயும் S சண்டையிட்டு R இறக்க வந்த காவலர் மற்றவர்களி கைது செய்து சிறையில் அடிக்க .. பயன் பட்ட சட்டம் பிரிவு 300 மற்றும் 302.... 

பயணம்

எழுந்து நின்ற சிலை
அருகே
மந்திரம் ஓதி
கொண்டிருக்க ..

மாய வலையில்
சிக்கிய மானிட
புத்திரர்கள் ...
ஓங்கி குரல்
எழுப்பி கொண்டிருந்தனர் ..

மகேசன் ஆடிய தாண்டவங்கள்
புராணம் தாண்டி வந்திருந்தன
குறுந்தகட்டில் ...
ஆடியது ஆடத்தெரியாத
ஒரு அடிப்பொடி ...

கூச்சலிட்டது கூட்டம்
இதுதான் ஆட்டம் ...
வழி மொழிவதை தவறிய
வேறு வழியில்லை ...
கூட்டதில் சிக்கிய
எறும்பு ஒன்று ..
மழைக் காலத்திற்க்காக
உணவு துணுக்குடன்
எந்நேரமும் மிதிப்பட்டு
சாவும் விதியுடன்
பயணிக்குறது.....

ஓவியம்

ஆகாயம் அதன்
போக்கில் வரைந்து
செல்லுது ஓவியங்களை ..

சில நேரங்களில்
பாய்ந்து செல்லும்
பறவைகள்
காணுமோ என்னமோ ...
அவை பாட்டாக
வடிப்பது எதை ?

 .... ஓவியங்கள்
ஒன்றோடொன்னு மோதி
பாய்ந்து சென்ற
பறவைகளை
குருடாக்கி...
அழுது அழிக்கின்றன
ஓவியங்களை ...
இப்பொழுது ஆகாயம் மீண்டும்
வரைய ஆரம்பிக்கிறது ....

இக்கதை தொன்று
தொட்டு தொடர்வதாக
அறிவிக்குறது
மேகங்களிலே தோன்றிய
சாலமன் காலத்து
வளர்ப்பொன்று..

அவை மேலும் தொடர்கின்றது ...
கண்ணீர் கண்ணீர் உடன் சேர்ந்து
பெரும் நீராக மாறி ...காற்றாக
 ...ஆகாயத்தின் தூரிகையுடன்
ஒட்டி உறவாடி.. பட்டுத் தெரிக்கிறது
மலை மீது மழையாக ...

எச்சங்கள் பாயாமல் பதுங்கி
ஊற்றாக மாறி .. மீண்டும்
மீண்டு பாய்கிறது
கண்ணீருடன் கலந்திட...
போகும் வழியெல்லாம்
மாற்றம் தருகின்றன ...

குருட்டு தவளை
ஒன்று கூக்குரலிடுகிறது
சத்தங்கள் நடுசாமத்தின்
அமைதியை குலைக்கிறது....

இப்பொழுது சிவப்பு
நிறம் எடுத்து மீண்டும்
நிறம் மாறுகிறது ....
ஆதவன் ஒளி
பட்டு காற்றாய்
மாறி மீண்டும்...







பந்து

விட்ட பந்து 
பட்டு தெரிக்கிறது 
நேர் கொட்டில் 
சுவர் அனுப்பிய 
பந்தை மட்டை
கொண்டு அடிக்கிறேன்...
மீண்டும் மீண்டும் 
பந்து ... திருப்பி 
திருப்பி அனுப்புகிறது 
சுவர் ...இப்பொழுது வேகம் ...
வேகமாய் மட்டையுடன் 
மோதி சென்று திரும்பி 
வரும் பந்து...
தானாக மோதி செல்ல ஆரம்பிக்கிறது
மட்டையுடன் என்ன சமரசமோ .....
சுவருக்கும் எனக்கும் தூரமில்லை 
இப்பொழுது மட்டையும்... 
பந்தும் சுவரும் 
அடிக்கொண்டு இருக்கின்றன 
நான் ஆடாத ஆட்டம் ஒன்றை ....

திரும்பி படிக்கவும் - 2

கை கொடுத்து அழைத்து வருகிறது... 9 காரா 12 கார என்று மனம்  பட படக்கிறது இடம் பிடக்க... பட படத்து இடம் பிடிப்பது ஆற அமர்வதற்க்காக அல்ல.. ஏதோ ஒரு இடத்தில் நின்னு விடலாம் நிம்மதியாக...நிம்மதி என்று ஒன்று இருந்தால்... ஏறி நின்னுவிட்டால் போதும்.. ஓடும் ரயிலில் ஏறும் ஜாம்பவான்கள் ஒரு உந்தி எல்லாரையும் இடம் பெயர செய்வார்கள்... சில நேரம் வெறும் காலிலே அல்லது ஷூவிலோ .. ஷூவோ காலோ மாறிவிடும்.... அதற்குள் அடுத்த நிலையத்தில் இறங்குபவர் .... உங்களை தள்ளவோ உள் இழுக்கவோ ஆரம்பித்து விடுவார் ....கைக்குட்டை அவசியம்... நீங்கள் மற்றவரை காயப்படுத்திவிடக்கூடாது என்பதற்க்காக அல்ல.. உங்கள் முகத்தில் ஈரத்தை அப்புறப்படுதுவதற்க்காக ... ஆம்.. சிலர் உங்கள் மூஞ்சியில் தும்முவார்கள்....தும்மிவிட்டு கல்யாண மண்டப வாசலில் பன்னீர் தெளித்ததை போல் புன்னகை பண்ணுவார்கள்... நீங்கள் அதை ஐ ஆம் சாரி என்றே புரிந்து கொள்ள வேண்டும்.. பதில் பேச வேண்டாம்.....பேசினால் என்ன புண்ணியம்? 

இருந்தும் நீங்கள் ஒரு இருத்தல்வயவாதியாக இருந்தால்.. நீங்கள் இருக்கலாம் ஒவ்வொரு நிமிடமும்.... நீங்கள் காணலாம் ஒரு அற்புதமான உலகு.. பிச்சை கேட்பவற்க்கு உணவே இடும் அற்புத மனிதர்களை அவர்களின் வியாக்யானங்களை தள்ளி வைத்து விட்டு பார்க்கலாம்.... சில நேரங்களில் உணவை வாங்கி துரத்தி செல்லும் மனிதர்களை கூட காணலாம்.. கீழே விழும் உணவிற்க்காக காசு வாங்கும் வியாபாரிகளை ...

உங்கள் கன்னத்தை கிள்ளியவாது காசு வாங்கும் திருநங்கைகளை... இறைவனிடம் கையேந்துங்கள்... பாடி நம்மளை இறைவனாக்கும் உச்சஸ்தானி பாடகர்களை... சில நேரம்.. விழும் பைசாக்களுக்கு ஏற்ப மாறும் உருகுதலை.... 

அதிர்ஷ்ட்டமிருந்தால் நீங்கள் கடந்து சென்ற ரயில் பிய்த்து போட்டு சென்ற உடல்களை ....சில நேரம் எம்‌பி3 ப்ளேயர் உதவியுடன் அனைவரைய்யும் ஊமையாக்கி பார்க்கலாம்...அவர்கள் சிரிப்புகள் ...சத்தமின்றி ரசிக்கலாம்...

முதல் வகுப்பில் செல்லும் 
போது நீ காற்று வாங்கலாம்
நீ இரண்டாம் வகுப்பாய் 
இருந்தால்....


Wednesday, October 10, 2012

எழுத்து

எழுத்து தியானம் 
என்றேன்...
எழுதி முடிக்கையில் 
கேட்டவன் அங்கில்லை...
காலம் நடந்து இருந்தது 
சிறு தூரம்...
பயணித்து வந்ததை 
பயணிக்க இயலவில்லை 




திரும்பி படிக்கவும் ..

குறிப்புகள், குறியீடுகள் இவை தான் எங்கும்... ஒரு குறியீடு அதற்க்கு மேலும் மட்றுமொன்று ... இப்படியே மென்மேலும் பல குறியீடுகளால் ஆனது குறிப்பு...
ஒவ்வொரு குறிப்பும் மட்றுமொறு குறிப்பை குறுக்கீடு செய்கிறது.. இங்கு இதை குறித்து இது என்று புரியுமுன்னே கடந்து சென்று விடுகின்றன சில ....

கடந்து வந்ததில் எதை தான் சொல்வது.. நிறம் மாறும் வானம் மறையுமுன்னே சிவப்பு... நீல வானம் திடுப்பென்று கருமை காட்டி ... பிறகு கதறி அழுது கண்ணீர் விட்டு நிறமட்று.. மீண்டும் நிறம் பெற்று .. சில நேரம் ஏழு நிறம் கட்டி செல்வது எதனால் ... ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு காரணம் காட்டி கல்லா காட்டும் அறிவியல் அறிஞர்கள் .... இவை அவையாகி அவை அவற்றுடன் மோதி ..இவை இவையெல்லாம் வருகின்றன என்றாலும்.. அவையெல்லாம் அறிய பல குறியீடுகள் குறிப்புகளை  தாண்டினாலும்....மிஞ்சி நிற்பது எதற்காக எதனால்.... விட்டு விடு .. இந்த வெங்காயங்களை என்றால்......வெங்காய விளக்கங்கள் வேறு வேறாக வருகின்றன... அவை நிறுவனங்களையும்... அவற்றை காப்பாற்றவும் அழித்தழிகின்றன.. குய்யோ முய்யோமென்று  கூவினால்.... குயில் காக்கையாகிடுமா என்ன ... காக்கைக்கு சதை என்ன தசை என்ன... கொத்தி விட்டு தாவுகின்றது... மரங்களுக்கிடையே மின்சார ஊஞ்சலில் மரணம் பெற்று ..கூட்டாக கத்தி தீர்க்கின்றன காகங்கள்...கூழாங்கல் தேடுகின்றேன்... காக்கை நீராற்ற அல்ல..தூரத்திலே .. ஆகாய விமானம் ஒன்று போட்டி  போட்டு பறக்கின்றது  புறாவுடன்.. சமாதான புறா ஒன்று சண்டையிட்டு வெல்கின்றது... வெட்கி தவிக்கும் விமானம் மேகத்திலே சிக்கி தவிக்க....

சில்லென்ற காற்று செவி மோதி செல்கிறது ...எத்திசை காற்றும் மழை தரும் என்று குறிப்பு சொன்னது.. எது எத்திசை என்று அறியாமல்... எத்திக்கும் நம் திக்கே என்று கூவி கொண்டு இருந்தான் தலைவன் ஒருவன்.....


Tuesday, October 09, 2012

மனமே

எதிலும் ஆனந்தமாக 
திளைத்திருக்க
உன்னால் மட்டுமே 
முடிகிறது....

ஓடும் போதும் 
முட்டி மோதி 
கீழ் வீழும்போதும்

எழுந்து மறுபடியும் 
அதை தொடரும்போதும் 

சிரிக்கும்போதும் 
கவனத்தை ஈர்க்க 
கண்ணீர் சிந்தும்பொழுதும் 
எப்பொழுதும் ஆனந்தம் ....

உன்னால் மட்டும் 
எப்படி குழந்தை 
மனமே?  அல்லது மனமில்லாத 
நிலையோ நானறியேன் !

கவிதை

இதுதான் எவ்வளவு கஷ்டம்
புரியாமலே புரிஞ்சதை
புரியாதது போல்
தெரியாமலே தெரிந்ததை
தெரிந்தது போல்
வார்த்தை மாற்றி
அர்த்தப்படுத்தி
முரணாக முன்னும்
பின்னும் கீழும்
மேலும்
கோர்த்து எடுத்தால்
வெறும் வார்த்தைகளே
தொக்கி நிற்கின்றன
வாழ்க்கையை போல் !

Sunday, October 07, 2012

நிலா கவிதைகள் ....

என்னை மன்னித்து விடு நிலவு
உன்னை திருடியாக்கி விட்டேன் ....
என்னவளின் முகத்திலிருந்தே
நீ வெளிச்சம் தருகிறாய் என !

----------------------------------------------

விடிய விடிய தேடுகிறேன்
விடிந்தும் தேடுகிறேன்
இன்றாவது பிறை
பார்க்க முடியுமா?

---------------------------------------------
மாலையில் உன்னை வருணிக்கும்
எவரும் காலை எழுவது இல்லையோ ...
இன் இனிய காலை நிலவே .....
---------------------------------------------------
நீ தேய்ந்து வளர்கிறாயா?
வளர்ந்து தேய்கிறாயா?
-----------------------------------------------------
உன்னை காட்டு
உணவு ஊட்டுகிறாள்
ஒருத்தி
நான் இங்கு உன்னையே
உண்டு கொண்டு இருக்கிறேன்

------------------------------------------


அதிகாலை


அதிகாலையை கவித்திட
கதவை திறக்க
காற்றுடன் நீயும் ரீங்காரத்துடன்
வந்தாய் கொசுவே !
இப்பொழுது மட்டையுடன் நான்
வலை பயிற்சிக்காக அல்ல !

Wednesday, October 03, 2012

முன் நவீனத்துவ குப்பை வண்டி


 முதல் காட்சியிலே கதையை ஒரு வரியில் காண்பித்து விட்டு படத்தை ஆரம்பிக்கிறார் இயக்குனர் , குப்பை வண்டி வந்து குப்பையை அள்ளுகிறது இரவில் , ஒரு ஜென் கவிதையாக படம் ஆரம்பம்....


அதே இரவிலே கொள்ளை நடக்கிறது சில கொலைகளுடன் , குப்பைகளுக்கு பதிலாக நகைகள் ?!  ஹீரோ வரும் முன்னே வந்து விடுகிறார் வில்லன் ....

அதோ இதோ என ஹீரோவை ஆவலுடன் எதிர் பார்த்திருந்த வேளையில், இவன்தான் வெல்வான் என்று ஆருடம் கூறிக்கொண்டு ஒரு கேரக்டர் இவரை மாஸ்டர் என்றே அழைப்போம்.. மாஸ்டர் சொன்ன மாதிரியே நடக்கிறது .... nostradrumstic.. இந்த வார்த்தை படித்த உடனே  nostradamus  நினைவுக்கு வந்தால் ஒரு முறை கை தட்டி கொள்ளுங்கள்... பாக்கியராஜ் நினைவுக்கு வந்தால் ??... 
ஆனால் அதையும் தாண்டி ஒரு படி மேலே சென்று "Moringa oleifera" என்ற தாவரவியல் பெயருக்கும் முருங்கைக்காய் என்ற தமிழ் பெயருக்கும் உள்ள உறவை ஆராய்ச்சி செய்தீர்களானால் ஒரு ஸ்ப்ரைட் குடிக்கவும். 


புரூஸ் லீ யாக இருந்தாலும் அப்பாவுக்கு தண்ட சோறாகத்தான் காட்சியளிப்பார் என்பதை உணர்த்துவதாகட்டும் , அம்மா பாசத்தையும், தலைமுறைகள் மாறி மாறி வருவதை உணர்த்தும் தாத்தாவாகட்டும் - an interesting touch என்று தான் சொல்ல வேண்டும்...

மாஸ்டர்க்கு வாடகை பிரச்சனைக்கு உதவி செய்வதற்க்கு உயிரை பயணம் செய்து சண்டை போடும்பொழுது தான் தெரிகிறது புரூஸ் லீ யின் வீரம் , அதனால் அவர்  சிறைக்கு செல்ல காரணமாகிறார் ஹீரோயின் , அழகு பதுமைகளுக்கு எந்த வேலையும் இல்லை என்ற விமர்சனத்துக்கு ஆளாக கூடாது என்பதற்க்கு வலை போட்டு தேடப்பட்ட  ஹீரோயின் !

"சமூக பிரச்சனைக்காகதான் நீ சண்டை இடுகிறாய் " என தாத்தா வீர வசனம்போது அவர் பேசும் வசனம் பின்னால் வரும் சண்டைகளுக்கென என அறியாமல் கெக்கலிக்கின்றனர் அறிவுஜீவிகள் திரை அரங்குகளில் ....

சில பல சண்டைகளுக்கு பிறகு ஹீரோய்யினை நேரில் பார்த்து மயங்கி நிற்கையில் ஹீரோ ..... இதோ பாடலுக்கான வாய்ப்பு என்றதை அதை மிஸ் பண்ண விடாமல் , அதே நேரத்தில் .... sidekick களை பாட செய்து அதையே kick ஆக (Read some review about Inception) use செய்வது .. அட அட என்ன சொல்லுவது.. அதுவும் ஹீரோ ஏதோ ஒரு அந்நிய தேசத்தில் ஹீரோயினுடன் ரொமான்ஸ் செய்து அவர் அடுத்த அடி வைப்பதற்க்குள்!!

என வில்லன் முன்னால் டார்க் நைட் வில்லன் ஊனம் என்பதை நாசூக்காக காட்டும் இயக்குனரின் கர்வம் ,ஊரையே கொள்ளை அடிப்பவர் முகமூடி இல்லாமலும், அதை எதிர்ப்பவர் முகமூடியுடன் காட்டும் irony ஆகட்டும்..... அட அட .. சொல்வதற்க்கு நிறைய இருந்தாலும்.. இத்துடன்.... மீதியை வெள்ளித்திரையில் காண்க....விருப்பம் இல்லாவிடில் "batsman trilogy" யை பார்த்து விட்டு அமைதி காக்கவும்....












Monday, October 01, 2012

மற்றுமோர் யுத்தம் - சின்னஞ்சிறிய கதை


இறுக்கமான சூழ்நிலை , எங்கு காணினும் தலைகள் , இப்போதோ அப்போதோ என்று ஆயத்தமாக நான் ..தன்னந்தனியனாக பார்த்து கொண்டு இருக்கின்றேன், சஞ்சயனுக்கு கூட துணை இருந்தது !

காரணங்களை பார்த்து கொண்டு இருந்தால் தருணங்கள் இல்லை , இப்போது இன்னும் உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தேன் , உக்கிரம் கூடி இருந்தது ....

நான்கு புறங்களிலும் , கூட்டம் கூட்டம் ஆக , வெவ்வேறு உருவங்களில் , விலங்குகள் கூட இருந்தன , மனிதர்கள் விலங்குகளாய் , விலங்குகள் மனிதர்களாகவும் கூட மாறத் தொடங்கி இருந்தனர் !

விஸ்வரூபங்களுக்கும் விநோத ரூபங்களுக்கும் பஞ்சமில்லை,  எத்தனை கீதை அரங்கேறியதோ , எதுவும் காதில் விழவில்லை , காதை பிளக்கும் சத்தம் மட்டுமே , அவ்வப்போது ஒளி கீற்று ....

காற்று காற்று வேகத்தில் வந்தது!