Tuesday, December 18, 2012
இவன்
Tuesday, December 04, 2012
Friday, November 30, 2012
Tuesday, November 27, 2012
காத்திருப்பு
Thursday, November 22, 2012
மின்சாரமில்லா ஒரு மணித்துளி
நாய் குரைக்கிறது
சிரிக்கிறீர்கள்
நிலா பார்க்கபடுகிறது
நட்சத்திரம் எண்ணப்படுகிறது
அருகில் வீடுகள் முளைக்கின்றது
மின்சாரம் உயிர் பெறுகிறது
இவை அனைத்தும் மறைகிறது!!!
Thursday, November 01, 2012
மற்றுமோர் மழைக்காலம்
மற்றுமொரு
குடை வழியாக
ஜன நெருக்கடியான
சாலைகள் !
----------------------------
தட்டான்கள்
பறக்கின்றன
மீண்டும்
தொலைந்து
போன மழைக்காலத்திற்க்கு !
------------------------------------------------
கிளைகளை உதிர்த்துவிட்டு
நிற்கிறது மரம் ....
காற்று பிடுங்கியதா ?
மரம் எறிந்ததா?
Tuesday, October 30, 2012
மொழி மாற்றம் - மற்றுமொன்று
பரமபிதாவே உனக்கு என்னை தெரியும் என்னைவிட
எனக்கு வயது ஏறுகிறது ஒருநாள் கிழமாகிடுவேன்
I have tried to translate one poem.. at first it seems to be simple poem.. easy to understand.. when try to translate it not seem to be easy to translate... stopped in the midway.. let me come back on another day ;-)
Translated from below , referenced by http://kadugu-agasthian.blogspot.in/2012/10/blog-post.html
17th Century Nun's Prayer
Lord, thou knowest better than I know myselfthat I am growing older and will someday be old.
Keep me from the fatal habit of thinking
I must say something on every subject and on every occasion.
Release me from the craving to straighten out everybody's affairs.
Make me thoughtful, but not moody: helpful, but not bossy.
With my vast store of wisdom, it seems a pity not to use it all,
but thou knowest, Lord, that I want a few friends at the end.
Keep my mind free from the endless recital of details;
give me wings to get to the point.
Seal my lips on my aches and pains. They are increasing, and love of rehearsing them is becoming sweeter as the years go by.
I dare not ask for grace enough to enjoy the tales of other’s pains,
But help me to endure them with patience.
I dare not ask for improved memory,
but for a growing humility and a lessening cocksureness
when my memory seems to clash with the memories of others.
Teach me the glorious lesson that occasionally, I may be mistaken.
Keep me reasonably sweet; I do not want to be a saint -
some of them are so hard to live with –
but a sour old person is one of the crowning works of the devil.
Give me the ability to see good things in unexpected places,
and talents in unexpected people.
And, give me, oh Lord, the grace to tell them so.
Amen.
Monday, October 29, 2012
மொழி மாற்றம் !
தொலைந்து போன துகளே
நீ தேட ஆரம்பிப்பாய் ... தேட .. தேட. ...
அடையும் வரை .. நீ துகளே ...
அடைந்த பிறகு முழுமையே !
Translated From following..
I can break you into pieces. There will be missing piece.
That you search for .. search for.. search for....
until you find ... you are the piece...
once you find...you are the whole..
Friday, October 26, 2012
fly in the face - review
அவன் ஒரு பிச்சைக்காரன் என்பதும், அவன் விஷம் அருந்தி இறந்திருப்பதும் அறிந்து அந்த விஷயம் முடிவுக்கு வருகிறது ... சில நேரம் கழித்து மற்றுமொரு சம்பவம் ..இதே மாதிரி மற்றுமொரு இடத்தில் நடந்தேற ..ஈக்கள் , பிணம் , விஷம் , பிச்சைக்காரன் .. என தொடர் கொலைகளா மாறி விடுகின்றது .... இதற்கிடையில் , இந்த விஷயம் பத்திரிக்கைகளில் வெளி வந்து ... மனித ஆர்வலர்கள் , பிச்சை காரர்களை அரசாங்கம் கவனிக்கவில்லை என்று போராட்டம் ஆரம்பிக்க....
ஆஹா.. இந்த படத்தின் genre இப்பொழுது சமூக பிரச்சனைகளாக மாறுகிறது.. மேலும் இந்த காட்சிகள் ஒரு டாக்குமெண்டரி போல , டிஸ்டிரிக்ட் -9 ல் வருவது போல காட்டப்படுவதால்.. அது , இப்படத்திற்க்கு வேறொரு கோணத்தை தருகிறது ...
மாறி மாறி விசாரணையும் , போராட்டங்களும் ஆரம்பித்து .... அரசாங்கம் கவனிக்க கடைசியில் , மரணங்கள் நிகழாமல் இருக்கின்றன .. கொலைகாரன் பிடிபட்டானா? அவன் ஏன் கொலை செய்தான் ? fly in the face டைட்டில், நம் சமுதாயத்தின் மீதும் மொய்க்கும் ஈக்கள் பிச்சைக்காரர்கள் என்பதை உணர்த்துகிறதா?
என்பதை வெள்ளித்திரையில் வந்தால் பார்த்து கொள்ளுங்கள் ..
Monday, October 22, 2012
குறுஞ்சிறு கதைகள்
பெய்யென பெய்த மழை , cut சொன்னவுடன் நின்றது
கண்ணாடி
உடலை பார்த்து கொண்டிருந்தேன் . உயிரில்லா என் உடலை !
பிடிக்குமா?
உன்னை எனக்கு மிக பிடிக்கும் என்றேன். எனக்கு பிடிக்காது என்றாள். இரண்டு பொய்கள் .
புகைப்படம்
இப்போதெல்லாம் பார்க்கும் புகைப்படங்கள் எல்லாம் என் மூஞ்சை தொடுகின்றன... ஆளில்லை .
தீவுகள்
கடலால் அல்லவா தீவு பிறக்கும்.. கடல் குழந்தையாலும் தீவு பிறக்கிறது ...
கெட்ட வார்த்தை
மூன்றெழுத்து கெட்ட வார்த்தை சொல்லவா....பீப் .....பீப்...வார்த்தை இசையானது..
Friday, October 12, 2012
அவன்
Thursday, October 11, 2012
லூப்பர் - 1
பட்டியல்கள்...
பட்டியல்களுக்கு மௌசு சேர்க்கலாம். எனில் புத்தகங்களையோ.. இசையையோ ... பார்த்து ரசித்த படங்களையோ பட்டியல் இடலாம்..ஆம் ஆம் என்று சொல்வதை காட்டிலும் .....இதோ ...
1. லூப்பர் ... (லூப்பிலிட்ட பாடல்களின் தொகுப்பு )
2. டர்னர் ... ( திருப்பி சென்ற பக்கங்களுக்கான சொந்தம் கொண்டாடும் புத்தகங்கள் )
3. கண்ணாமூச்சி ( என் கண் முன்னே கண்ணா மூச்சி நடத்தி சென்ற படங்களின் தொகுப்பு .... ).....
இன்னும் எத்தனையோ பட்டியல்கள் இடலாம்.. ஆம்...
புகை வண்டி நிலையம்
எத்தனை முகங்கள்.... எத்தனை கனவுகள் ... வெறுப்புகளோடு சிலர் ....கூவி கொண்டிருந்தனர்.. அதை கடுப்புடன் கடந்து செல்வனுக்குத்தான் எத்தனை வெறுப்பு.... இன்று கூட கடந்து செல்கையில் குமரியின் குரல் "இதை நான் சினிமாவில் தான் பார்த்து இருக்கேன் " , இவ்வளவு கூட்டம்....என்னமோ திருவிழா மாதிரி அல்லவா இருக்கிறது.... தேர் மட்டும் தான் இல்லை... சில நேரங்களில் மனிதக்கூட்டம் இந்த நிலையத்தை இழுத்து கொண்டிருக்கும் வடம் போல்...ஆனால்... நிலையம்தான் மக்களை இழுத்தும் , உமிழ்ந்தும் கொண்டு இருக்கிறது ...
காவலாளி ஒருவன் உணவருந்தும் ஜோடியை துரத்தி கொண்டு இருக்கிறான்.. அவர்கள் வீடில்லாதவர்களாக இருக்கலாம்.... இருந்தும் இங்கு வந்து அமர்ந்திருக்கலாம் .. தெரியவில்லை..ஆனால் ... கம்பீரமான காவலாளி ஒரு கனிவுடன் ... சாப்பிட்ட பிறகு காலி பண்ணி விடு.. இல்லையேல் என் மேலதிகாரி என்னை திட்டுவான் என்று கூறி கொண்டு இருந்தான். .. அவன் அவனவனுக்கு ஒவ்வொரு கவலை.... எனக்கென்ன கவலை... நான் இழந்து இருக்கிறேன்... எத்தனை மாற்றங்கள்... ஒவ்வொரு மாற்றத்திலும் பலம் கூடியதாக இருக்கிறது..... நான் விஸ்தாரமாக்கபட்டு இருக்கின்றேன்....
பலத்தை சோதிக்க இவர்களும் பெருகி கொண்டே இருக்கின்றனர்... அவன் சொல்லுகிறான் .... இவர்களை நான் உமிழ்ந்து கொண்டு இருக்கின்றேன்.... இல்லை நான் பாரம் தாங்காமல் அவர்களை தூக்கி எறியதான் பார்க்கிறேன்... ஆனால் இவர்கள் நத்தை போல் ஊர்ந்து செல்கின்றனர் ... முன்னாள் ஒருவன் புகை எரிந்து விட்டு கடந்து செல்லுவான்.. நான் நிறம் மாறத் தொடங்குவான்..இவன் இப்பொழுது .... என் மேலும் .. எனக்கு மேலும் ... கயிறு கட்டி செல்லுகின்றான்.. இவனின் சத்தம் கூட மாறி விட்டது...
ஆதியிலே நான் இவனை
சில முறை தான்
பார்ப்பேன் அனுதினமும்...
ஆனால்.. இப்பொழுது நிமிடத்துக்கு
ஒருமுறை கடந்து செல்கிறான்
என் மீது அதிக பாரத்துடன்...
என்ன சொல்லுவது...
அவன் சொன்னது போல
இவன் என் மேல் உமிழ்ந்து செல்கிறான்...
ஒருவன் துப்பி செல்கிறான் ...ஒருவன்
அழுது புரள்கின்றான்.... ஒருவன் என்னை
கண்டும் காணாமல் ஓடி செல்கிறான்
அவனை கண்டு...நான் கண்டும் காணாமல் ..
இருக்கிறான்....
இவர்களின் பயணம் தொடரும் வரை என் பயணம் தொடருமா?
திரும்ப படிக்கவும் - 3
பயணம்
அருகே
மந்திரம் ஓதி
கொண்டிருக்க ..
மாய வலையில்
சிக்கிய மானிட
புத்திரர்கள் ...
ஓங்கி குரல்
எழுப்பி கொண்டிருந்தனர் ..
மகேசன் ஆடிய தாண்டவங்கள்
புராணம் தாண்டி வந்திருந்தன
குறுந்தகட்டில் ...
ஆடியது ஆடத்தெரியாத
ஒரு அடிப்பொடி ...
கூச்சலிட்டது கூட்டம்
இதுதான் ஆட்டம் ...
வழி மொழிவதை தவறிய
வேறு வழியில்லை ...
கூட்டதில் சிக்கிய
எறும்பு ஒன்று ..
மழைக் காலத்திற்க்காக
உணவு துணுக்குடன்
எந்நேரமும் மிதிப்பட்டு
சாவும் விதியுடன்
பயணிக்குறது.....
ஓவியம்
போக்கில் வரைந்து
செல்லுது ஓவியங்களை ..
சில நேரங்களில்
பாய்ந்து செல்லும்
பறவைகள்
காணுமோ என்னமோ ...
அவை பாட்டாக
வடிப்பது எதை ?
.... ஓவியங்கள்
ஒன்றோடொன்னு மோதி
பாய்ந்து சென்ற
பறவைகளை
குருடாக்கி...
அழுது அழிக்கின்றன
ஓவியங்களை ...
இப்பொழுது ஆகாயம் மீண்டும்
வரைய ஆரம்பிக்கிறது ....
இக்கதை தொன்று
தொட்டு தொடர்வதாக
அறிவிக்குறது
மேகங்களிலே தோன்றிய
சாலமன் காலத்து
வளர்ப்பொன்று..
அவை மேலும் தொடர்கின்றது ...
கண்ணீர் கண்ணீர் உடன் சேர்ந்து
பெரும் நீராக மாறி ...காற்றாக
...ஆகாயத்தின் தூரிகையுடன்
ஒட்டி உறவாடி.. பட்டுத் தெரிக்கிறது
மலை மீது மழையாக ...
எச்சங்கள் பாயாமல் பதுங்கி
ஊற்றாக மாறி .. மீண்டும்
மீண்டு பாய்கிறது
கண்ணீருடன் கலந்திட...
போகும் வழியெல்லாம்
மாற்றம் தருகின்றன ...
குருட்டு தவளை
ஒன்று கூக்குரலிடுகிறது
சத்தங்கள் நடுசாமத்தின்
அமைதியை குலைக்கிறது....
இப்பொழுது சிவப்பு
நிறம் எடுத்து மீண்டும்
நிறம் மாறுகிறது ....
ஆதவன் ஒளி
பட்டு காற்றாய்
மாறி மீண்டும்...
பந்து
திரும்பி படிக்கவும் - 2
Wednesday, October 10, 2012
எழுத்து
திரும்பி படிக்கவும் ..
Tuesday, October 09, 2012
மனமே
கவிதை
புரியாமலே புரிஞ்சதை
புரியாதது போல்
தெரியாமலே தெரிந்ததை
தெரிந்தது போல்
வார்த்தை மாற்றி
அர்த்தப்படுத்தி
முரணாக முன்னும்
பின்னும் கீழும்
மேலும்
கோர்த்து எடுத்தால்
வெறும் வார்த்தைகளே
தொக்கி நிற்கின்றன
வாழ்க்கையை போல் !
Sunday, October 07, 2012
நிலா கவிதைகள் ....
உன்னை திருடியாக்கி விட்டேன் ....
என்னவளின் முகத்திலிருந்தே
நீ வெளிச்சம் தருகிறாய் என !
----------------------------------------------
விடிய விடிய தேடுகிறேன்
விடிந்தும் தேடுகிறேன்
இன்றாவது பிறை
பார்க்க முடியுமா?
---------------------------------------------
மாலையில் உன்னை வருணிக்கும்
எவரும் காலை எழுவது இல்லையோ ...
இன் இனிய காலை நிலவே .....
---------------------------------------------------
நீ தேய்ந்து வளர்கிறாயா?
வளர்ந்து தேய்கிறாயா?
-----------------------------------------------------
உன்னை காட்டு
உணவு ஊட்டுகிறாள்
ஒருத்தி
நான் இங்கு உன்னையே
உண்டு கொண்டு இருக்கிறேன்
------------------------------------------
அதிகாலை
அதிகாலையை கவித்திட
கதவை திறக்க
காற்றுடன் நீயும் ரீங்காரத்துடன்
வந்தாய் கொசுவே !
இப்பொழுது மட்டையுடன் நான்
வலை பயிற்சிக்காக அல்ல !
Wednesday, October 03, 2012
முன் நவீனத்துவ குப்பை வண்டி
முதல் காட்சியிலே கதையை ஒரு வரியில் காண்பித்து விட்டு படத்தை ஆரம்பிக்கிறார் இயக்குனர் , குப்பை வண்டி வந்து குப்பையை அள்ளுகிறது இரவில் , ஒரு ஜென் கவிதையாக படம் ஆரம்பம்....
அதே இரவிலே கொள்ளை நடக்கிறது சில கொலைகளுடன் , குப்பைகளுக்கு பதிலாக நகைகள் ?! ஹீரோ வரும் முன்னே வந்து விடுகிறார் வில்லன் ....
அதோ இதோ என ஹீரோவை ஆவலுடன் எதிர் பார்த்திருந்த வேளையில், இவன்தான் வெல்வான் என்று ஆருடம் கூறிக்கொண்டு ஒரு கேரக்டர் இவரை மாஸ்டர் என்றே அழைப்போம்.. மாஸ்டர் சொன்ன மாதிரியே நடக்கிறது .... nostradrumstic.. இந்த வார்த்தை படித்த உடனே nostradamus நினைவுக்கு வந்தால் ஒரு முறை கை தட்டி கொள்ளுங்கள்... பாக்கியராஜ் நினைவுக்கு வந்தால் ??...
ஆனால் அதையும் தாண்டி ஒரு படி மேலே சென்று "Moringa oleifera" என்ற தாவரவியல் பெயருக்கும் முருங்கைக்காய் என்ற தமிழ் பெயருக்கும் உள்ள உறவை ஆராய்ச்சி செய்தீர்களானால் ஒரு ஸ்ப்ரைட் குடிக்கவும்.
Monday, October 01, 2012
மற்றுமோர் யுத்தம் - சின்னஞ்சிறிய கதை
இறுக்கமான சூழ்நிலை , எங்கு காணினும் தலைகள் , இப்போதோ அப்போதோ என்று ஆயத்தமாக நான் ..தன்னந்தனியனாக பார்த்து கொண்டு இருக்கின்றேன், சஞ்சயனுக்கு கூட துணை இருந்தது !
காரணங்களை பார்த்து கொண்டு இருந்தால் தருணங்கள் இல்லை , இப்போது இன்னும் உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தேன் , உக்கிரம் கூடி இருந்தது ....
நான்கு புறங்களிலும் , கூட்டம் கூட்டம் ஆக , வெவ்வேறு உருவங்களில் , விலங்குகள் கூட இருந்தன , மனிதர்கள் விலங்குகளாய் , விலங்குகள் மனிதர்களாகவும் கூட மாறத் தொடங்கி இருந்தனர் !
விஸ்வரூபங்களுக்கும் விநோத ரூபங்களுக்கும் பஞ்சமில்லை, எத்தனை கீதை அரங்கேறியதோ , எதுவும் காதில் விழவில்லை , காதை பிளக்கும் சத்தம் மட்டுமே , அவ்வப்போது ஒளி கீற்று ....
காற்று காற்று வேகத்தில் வந்தது!
Saturday, February 11, 2012
Word game:
( One of the chapter of my novel yet to write !)
Pre-Hook:
It’s been few years that I have posted blogs in English, when I started blogging I have tried in English to learn English, later I felt or realized that language is just for communication , so learning the rules of the language , is just make you to feel better, nothing else, so started back to write in tamil, in which I feel Home to write the emotions especially uncontrolled emotions poems (kavithai) , but when it comes to dealing with controlled emotions such as philosophy, I can come back to English, maybe the reason is that, I have started to learn philosophy in English .
Word game:
I can’t stop laughing at seeing stickers in the bike or car that dealing with self , so called self help, it meant to me , a self destruction, where you create pseudo self and feeling that you are helping yourself, your self! One of such a word, I frequently encounter in the roads, “Nothing is Impossible”, whenever I see this message (everyone needs message from someone else) , my thought goes like this…
When someone says “Nothing is Impossible”, I question myself “Nothing is Possible?”
If Nothing is Impossible why can’t nothing is possible, to whom nothing is Impossible? to whom Nothing is Possible?
Those who say Nothing is Impossible, will listen to everything around and react to most of it, they wants to prove that they are false and works towards that , some time it vary from small group of people to large set of people.
Other category of people , they practice "Doing Nothing" for them "Nothing is possible", don't care about everyone else, just they go with their life flow!
Who things Nothing is Impossible achieve higher accolades in the materialistic world, where people things Nothing is Possible achieve higher accolades in spiritual world !
But, for most of us, not everything possible, so we think Nothing is Impossible and go towards that and fail, then we are afraid of failures and come back and think nothing is possible, we failed to achieve this too!
We start , fluctuating between both the states, so nothing is impossible or nothing is possible? What I am doing here , am i trying to achieve nothing is possible or nothing is impossible??? Who knows....
Monday, February 06, 2012
கடவுள் ?
இந்த கேள்வி அடிக்கடி
குழப்பத்தில் ஆழ்த்துவதுண்டு
கடவுள் நம்பிக்கை உண்டா
இல்லையா என்று ?
கேட்பவர்களுக்கெல்லாம்
புன்னைகையோ ஓரிரு
வார்த்தைகளில் விடையோ
தருவதுண்டு சில நேரங்களில்
கடவுள் நம்பிக்கை உள்ளவர்களிடம்
இல்லையென்றும் , சில நேரங்களில்
நம்பிக்கை இல்லாதவர்களிடம்
உண்டோ என்று சொல்லியோ
விவாவிப்பதும் உண்டு
வென்றாலும் தோற்றாலும்
எது உண்மை என்று என்றும்
எதிலும் ஒரு தீர்மானம் இருந்ததாக
நினைவில்லை !
பஸ்ஸில் பயணம் செய்து
ஹோட்டலில் சாப்பிட்டு
கடை வீதியில் பயணம் செய்து
நெடு வரிசையில் நின்று அப்பா
தோள் மீது ஏறி நின்று
தீபாராதனை வெளிச்சத்தில்
கடவுள் முகம் தெரியும்போதோ
சூடத்தை தொட்டு அம்மா
முகத்தில் இடும்போதே
பக்தி பரவசத்தில் ஆழ்ந்திருந்ததாக
ஒரு நினைவு !
மார்கழி மாதத்தில்
பஜனை பாடிக்கொண்டு
கோயிலை சுற்றியதுண்டு
நவராத்திரி பூஜைகளில்
போற்றி போற்றி எனும்
மந்திரம் ஓத
நம்மை தொடர்ந்து எல்லாரும்
ஓத நாம் கடவுளுக்கு
வழிகாட்டியோ என்றதொரு
பருவம் !
அந்த கடவுள் எல்லாம் பொய்
என்று பள்ளியில் புதிதாக
ஒரு கடவுளை காட்டி
புதிய புதிய tune இல்
பாட்டிசைக்க கூடி
ஆடி பாடி வழிபாட்டு
முறை மாற்றி
வாரந்தோறும் தொழுததொன்று !
உடல் நலமில்லாமல்
போகும்பொழுது
தீடிரென குடும்பத்துடன்
பயணித்து மரத்தடியில்
அமர்ந்து எந்தவொரு
ஆர்ப்பாட்டமுமில்லாமல்
பொங்கல் படைத்து
பலா வெட்டி கும்பிட்ட
பொழுது கடவுள் நம்
குடும்பங்களிலும் இருந்திருந்தார்
என்றொரு நம்பிக்கை !
தனியாக கோயிலுக்கு
போக ஆரம்பித்த நேரம்
அலுப்புடன் பயணித்து
கால் கடுக்க நின்று
கை கூப்பிட்டு நின்றாலும்
கருவறைக்கு உள்ளே
அனுமதி இல்லை
புரியாத பாசையில்,
புரோக்கர் வந்த பொழுது
தூரம் ஆரம்பித்தது
கடவுளுக்கும் எனக்கும் !
ஏழ்மை வறுமை
முதுமை
அல்பாய்ஸூ மரணம்
சாதி பேதங்கள்
சுரண்டல்கள்
ஏற்றத்தாழ்வுகள்
இவையெல்லாம்
பார்க்கும்பொழுது
தூரம் இன்னும்
அதிகரித்தது !
படிப்பு
வேலை,
தகுதி
மீறிய வெற்றி
சுயமாக நிற்கும்
சக்தி
இவையெல்லாம்
நாடி வந்த பொழுது
நாம் தான் கடவுளே
என்றதொரு
எண்ணத்தில் கடவுள்
மறைந்தது கூட உண்டு !
ஆனால் மீண்டும்
மீண்டும் தோல்வி வந்து
துவண்டு போகும்போது
ஆகாசமாய்
நட்சத்திரமாய்
கடலலையாய்
வீசும் காற்றாய்
மணக்கும் பூவாய்
நடுநிசி அமைதியாய்
குழந்தையின் புன்னகையாய்
வந்து நிற்கும்பொழுதேல்லாம்
ஓர் குழப்பம் !
மீண்டும் புன்னகையோ
ஓரிரு வார்த்தையோ
அந்த கேள்விக்கு
என்ன பதில் ?
Tuesday, January 31, 2012
எனதருமை கவிதையே
என்னை எழுதென்று
வந்து நின்றாய்
ஆதி எங்கே
அந்தம் எங்கே
என தெரியாமல்
விழித்தேன்
வார்த்தைகள் விக்கித்து
நின்றன, மறந்தன
மழலை மொழியாய்
மாறியன!
முயற்சித்தேன்
தவமிருந்தேன்
அங்கொன்றும்
இங்கொன்றுமாய்
வார்த்தைகள் வந்து
மோதின !
சீர் தூக்கி சேர்த்தேன்
சிதறி விழுந்ததலிருந்து!
எழுதி முடிக்கையில்
விலகி சென்றாய்
எனதருமை கவிதையே !
நகுலன் பாணி ?
நேரில் வந்தவர்கள்
கனவிலும் வந்தார்கள்
கண்டது கனவா
காண்பது கனவா !
----------------
என்னை பற்றி
தான் அவன் பேசி
கொண்டிருந்தான்
என்னிடம் தான்
பேசி கொண்டிருந்தான்
அவனை பற்றி
தான் பேசி கொண்டிருந்தேன்
அவனிடம் தான்
அவனும் நானும்
ஒன்றா வெவ்வேறா ?
இருட்டினில்
பழகி பழகி
பேதம் தெரியவில்லை
அவனுக்கு புலப்பட்டன
பல விஷயங்கள்
அவனுக்கு முன்னால்
அங்கிருந்தவன் கண் மூடி
இருந்திருந்தான் கண்
திறந்ததும் "
நான் வெகு நாளாக இருக்கிறேன்
எனக்கு புலப்படாத
விஷயங்கள் இவனுக்கு எப்படி?"
என உருவாக்கி கொண்டான் பல பல ,
இப்பொழுது
இருவருக்கும் குழப்பம்
அங்கு எது உள்ளது எது
இல்லையென்று
இப்பொழுது
அங்கு இருக்கும் எதுவும் அங்கு இல்லை
அங்கு இல்லாத பல அங்கு உண்டு
ஆம் அவர்கள் இருட்டுக்குள் சிக்கி
விட்டனர் இருட்டினில் !
Monday, January 30, 2012
கடலை விழுங்கும் அலைகள்
எழும்பொழுது
மற்ற பல அலைகளும்
எழும்புகின்றன
அவைகளுக்குள்
நான் பெரிது
நான் பெரிது
என போட்டி இட்டு
சில நேரம்
கடலையும்
விழுங்கி விட
பார்க்கின்றன
மீண்டு எழும்
கடல் மீண்டும்
மீண்டும் அலைகளை
உருவாக்குகிறது
ஆம்
மீண்டும் மீண்டும் !
Tuesday, January 17, 2012
இந்த வருட புத்தகக் கண்காட்சி 2012
இந்த வருட புத்தகக் கண்காட்சிக்கு பெரியதாக புத்தகப் பட்டியல் எதுவும் தயார் செய்யவில்லை , ஆனால் , ஒரு உத்தேசம் இருந்தது , அது என்னவெனில் , அதிகப்பட்சம் 5000 ரூபாய் செலவு செய்யலாம் என்றும், மொழிப்பெயர்ப்புகள், பிரமிள், கு. ப. ரா , ஜானகிராமன் புத்தகங்களை வாங்க வேண்டுமென்று , அதே போல , கிழக்கு, காலச்சுவடு, உயிர்மையைத் தவிர்க்கலாம் என்றொரு எண்ணம், ஏனெனில் , இவற்றுள் அதிக அளவில் கடந்த ஆண்டில் புத்தகங்கள் வாங்கியாச்சு, அது மட்டுமின்றி , அவர்கள் அணுகுவதற்கு எளிதானவர்கள் ஆண்டு முழுவதும் ! பிரமிள் புத்தகங்கள் வாங்குவதற்காக , அடையாளம் சென்றேன், அங்கு கால சுப்பிரமணியம்(அப்பொழுது எனக்கு பெயர் ஞாபகத்தில் இல்லை ), அடையாளத்தில் பிப்ரவரி மாத இறுதியில் தான் புத்தகம் வருவதாகவும் , வம்சி மற்றும் நற்றிணையில் சில புத்தகம் கிடைப்பதாக சொன்னார் ! அங்கு , சில புத்தகம் இரண்டு அல்லது நான்கு நாட்களில் வரும் என்றார்கள், ஆனால் வழக்கம் போலவே தாமதம் ஆனதால் மேலும் இருமுறை செல்ல வேண்டியதாகி விட்டது , ஆக மொத்தம் இந்த வருடம் மூன்று தடவை புத்தக கண்காட்சி சென்று வந்தாச்சு ! இதில் சாகித்ய அகாடெமியில் 50%, புதுப்புனலில்20%, மற்ற எல்லா இடங்களிலும் 10% தள்ளுபடி விலையிலும் கிடைத்தது !
பிரமிள்:
=======
வரலாற்று சலனங்கள் - பிரமிள் - வம்சி - 400
வெயிலும் நிழலும் - பிரமிள் - வம்சி - 200
தமிழின் நவீனத்துவம் - பிரமிள் - நற்றிணை - 140 ( இந்த புத்தகத்தில் உள்ள கட்டுரைகள் மற்ற புத்தகங்களில் உள்ளது , இந்த வருஷம் பல்ப் இதுதான் , இதுக்கு முன்னால் இதே மாதிரி பல்ப்கள் , குறிஞ்சி மலர் ரெண்டு தடவை , ரெண்டு புத்தகக் கண்காட்சியில் வாங்கியது, அப்புறம் , சாரு நிவேதிதாவின் கடல்கன்னி (உயிர்மையில் இதே புத்தகத்தின் பெயர் ஊரின் மிக அழகானப் பெண்! )
விடுதலையும் கலாச்சாரமும் - பிரமிள் - விருட்சம் - 60 (விருட்சதில் இருந்தவர் , கு. ப. ரா புத்தகம் படிப்பதற்கு முன்னால் ,பெருமாள் முருகனின் கு. ப. ரா அறிமுகத்தை படிக்க சொன்னார் )
சாது அப்பாத்துரையின் தியானதாரா - பிரமிள் - வம்சி - 30
சூரியன் தகித்த நிறம் - பிரமிள் - நற்றிணை - 70
பாதையில்லாப் பயணம் - பிரமிள் - வம்சி - 150
(பிரமிள் படைப்புகள், பிரமிள் கவிதைகள் ஏற்கனவே உள்ளன, ஆக மொத்தம் அச்சில் உள்ள அத்தனையும் வந்தாச்சு, என்ன படிக்க கொஞ்சம் சிரமம் தான், பார்ப்போம் எத்தனை புத்தகங்கள் அடுத்த ஆண்டிற்குள் படித்திருப்பேன் என்று) ;-))
தொகுப்புகள் :
=============
கு. ப. ர. எழுத்துக்கள்( எட்டு புத்தகங்கள் ) - கு. ப. ராஜகோபாலன் - அல்லயன்சு - 700 (அடையாளத்திலும் கு. ப. ர தொகுப்புகள் உள்ளன , ஆனால் , அதுக்கு முன்னாலே இதை வாங்கி விட்டேன், ஆனாலும் ஒரு நன்மை என்னவெனில், எட்டு சிறு புத்தகங்களாக உள்ளது )
தி. ஜானகிராமன் படைப்புகள் (சிறுகதைகள் , கட்டுரைகள் - இரண்டு புத்தகங்கள் ) -தி. ஜானகிராமன் - ஐந்திணை - 625
மகாமுனி (சிறுகதைகள்) - பிரேம் - ரமேஷ் - அடையாளம் - 180
சிதைவுகளின் ஒழுங்கமைவு : பின்நவீனத்துவப் பிரச்சினைகள்(கட்டுரைகள் ) - பிரேம் - ரமேஷ் - காவ்யா - 100
கரிசக்காட்டு கடுதாசி(கட்டுரைகள் ) - கி. ராஜநாராயணன் - ஐந்திணை - 130
புதுமைப்பித்தன் கவிதைகள் - புதுமைப்பித்தன் -ஐந்திணை - 30
அய்யப்ப பணிக்கரின் கவிதைகள் - நீல. பத்மநாபன் - சாஹித்ய அகாடெமி - 140
கன்னடக் கவிதைகள் - பலர் - சாஹித்ய அகாடெமி - 140
நாலு வகைப் பூவெடுத்து - தமிழர் நாட்டுப்புறப் பாடல்கள் - சாஹித்ய அகாடெமி - 90
முத்திரைக் கதைகள் - ந. பிச்சமூர்த்தி - செல்லப்பா – 60
நாவல்கள்:
=============
தீ - எஸ். பொன்னுதுரை - மித்ர - 50
உள்ளேயிருந்து சில குரல்கள் ௦- கோபி கிருஷ்ணன் - முன்றில் - 25
வாக்குமூலம் - நகுலன் -முன்றில் - 15 ( ஏற்கனவே, நாய்கள், நவீனன் டைரி படித்தாயிற்று , நினைவுப்பாதை புரட்டி கொண்டி இருக்கேன் ! அதற்குள் இன்னொன்று ! )
புயலிலே ஒரு தோணி - ப. சிங்காரம் - தமிழினி - 290
பூமணியின் ஐந்து நாவல்கள் ( பிறகு, வெக்கை , நைவேத்யம் , வாய்க்கால்கள் , வரப்புகள் ) - பூமணி - பொன்னி - 300
நாடகங்கள்:
===========
நாடகங்கள் விவாதங்கள் - அ. ராமசாமி - 25
இதிகாசங்கள்:
============
மஹா பாரதம் - ராஜாஜி - வானதி - 80
மொழிப் பெயர்ப்புகள்
===================
சிறு கதைகள்:
------------------------
வாழ்வின் அழைப்பு - கோ. பிரேம் குமார் - புதுப்புனல் - 79
ஆக்கிரமிக்கப்பட்ட வீடு - ஆர். ரவிச்சந்திரன் - புதுப்புனல் - 120
கன்னடத் தலித் இலக்கியம் - தமிழவன் - சாஹித்ய அகாடெமி - 90
நாவல்கள் :
----------------------
கில் காமேஷ் - க. நா. சுப்ரமண்யம் - சந்தியாப் பதிப்பகம் - 30
குள்ளன் - தி. ஜானகிராமன் - ஐந்திணை - 65
அன்னை - தி. ஜானகிராமன் - ஐந்திணை - 75
பலி பீடம் -௦ புதுமைப்பித்தன் - பூம்புகார் - 45
தாய் - மாக்சிம் கார்க்கி - பாரதிப் புத்தகாலயம் - 190
டிராகுலா - சிவன் - அல்லயன்சு - 46
தத்துவம் :
------------------
பிளாட்டோவின் குடியரசு - ஆர். ராமஆஜசாரி - சாஹித்ய அகாடெமி - 200
அம்பேத்காரின் புத்தரும் அவர் தம்மமும் - பெரியார் தாசன் - பத்மா - 110
சைவ தத்துவம் - கா. ஸ்ரீ. ஸ்ரீ - அல்லயன்சு - 100