Tuesday, January 25, 2011

அவர்கள்

நான் எழுதாத கவிதை ஒன்று
என் பெயரில் பிரசுரம்
அதை படிக்காத ஒருவனின்
பல பக்க விமர்சனம்
படித்ததாக வியந்து பல்வேறு
பாராட்டு கடிதங்கள்
எழுதியவனை ஏனென்றேன்
அவர்கள் அப்படிதான் என்றான்!

Monday, January 24, 2011

நட்டாற்று பிள்ளையார்

நட்டாற்றிலே நட்டாற்றிலே விழுந்திட்ட
வித்தொன்று அதன் அருகிலே கல்லொன்று
விழுந்த வித்து விருச்சமிட்டு மரமாய்
கல்லோ பிள்ளையாராய் மாறிட
அதனை சுற்றி நகரமொன்று
அக்கல்கூட அதனையும் மரத்தையும்
காத்திட அவ்வாற்றினை காத்திட
யாதொரு நாதி இல்லை !



Friday, January 21, 2011

ஆநாத்திகன் !


நீ ஆத்திகனா நாத்திகனா என்றவனிடம்
ஆநாத்திகன் என்றேன்
ஆனால் என்றான் ?

இதை buzz இய எட்டாவது நிமிடத்தில் கதவு தட்டப்பட , யாரது என்று கேட்டுக்கொண்டே கதவை திறந்தேன் !
ஆனால் என்றவன் என்றார் ?... உங்கள் buzz ஐ பார்த்ததும் பஸ் ஏறி வந்துட்டேன்ன்னு ..

வாருங்கள் அமருங்கள் என்றேன்

அவர்: ஆநாத்திகன் னா?
நான்: முதலில் இருந்து வாருங்கள் என்றேன் ?

அவர்: நாத்திகன் னா ?
நான்: கடவுளை வெறுப்பது.

(இப்பொழுது seat-இன் நுனியில் அவர் )

அவர்: ஆத்திகன் னா ?
நான்: மனிதனை வெறுப்பது

(எழுந்தே விட்டார்)

அவர்: ஆநாத்திகன் னா?
நான்: யாரை வெறுப்பது என தெரியாமல் தன்னை தானே வெறுப்பது

(பின்னங்கால் பிடரியில் பட .....)

சினிமா கணக்கு !!!

ஆயிரம் ஆயிரம் பேர்
அரங்கு நிறைந்த கட்சிகள்
சராசரியாக நூறு ரூபாய்
வெள்ளைத்தோலின் மீது காதல்
ஒற்றைத் தோலாய் ஒருவன்
களம் புகுந்து காலால்
எத்த பறந்தனர் பலர்
ஒற்றை தோலுக்கு ஓரிரு கோடி
வெள்ளை தோலுக்கு அதில் பாதி
பறந்தவருக்கு நானூறு அது
அருமை என்று எழுதியவருக்கு
ஆயிரம் பார்த்ததில் பாதிபேருக்கு
அடுத்த வேலை சோறு ?

சூன்யம்

சூன்யம் முதலில் வெடித்தது
வெளிவந்தவன் சூன்ய இரகசியத்தை
கவிதையாக புனைந்திட முயன்றான்
முயற்ச்சியில் அயர்ச்சி கிழித்தெறிந்தான்
சுக்கு நூறாக பறந்தது
மேல் சென்றவை எல்லாம்
நட்சத்திரங்கள் ஆகா உருவெடுத்து
கீழ் புகுந்தவை செடியாய்
மரமாய் சூன்யத்தை மறக்காமல்
பிழையாய் போன எழுத்துகள்
எல்லாம் மனிதனாய் மாறி
எழுத்தையும் எழுதியவனையும் தேடி
தேடியே மறந்தது சூன்யம்!

கறை

வெள்ளை சட்டையில் கறை
கடந்து சென்ற வாகனம்
விரைந்து செல்லும் பேருந்து
பின் இருக்கையில் ஒழுங்கு
இல்லை ஆயிரம் கோடி
ஊழல் பெட்ரோல் விலை
மாற்றம் வேண்டும் என்ற
பேச்சின் இடையில் வெற்றிலை
குதப்பி துப்பிய எச்சில் !

Tuesday, January 18, 2011

ஜாதக கவிதை ?

செவ்வாய் தோஷம் என்று மணமாகவில்லை
மணமுடிக்காமல் நாம் வாழலாம் என்றேன்
ஆரம்பித்ததும் செவ்வாயும் விளையாடியது
இப்பொழுது ஆவியாய் நான்
இன்னொருவரின் மனைவியாக அவள்
விதவையாக என் மனைவி !