“அப்போது பத்தரையில் இருந்து பதினொன்றுக்குள் இருக்கலாம். வழக்கமாக எட்டுக்கெல்லாம் கிளம்பிவிடும் பழக்கம் , எட்டுக்கு கிளம்பியிருந்தால் அங்கு வர கால் மணிநேரம் தான் ஆகி இருக்கும் , ஆனால் இன்னைக்கோ கிளம்பியது பத்து இருக்கும், வீட்டை விட்டு வெளியே வந்தப்போ மணி பார்த்தப்போ ஒன்பது ஐம்பது , கீழே வந்து பைக்கை துடைத்து வெளியே கொண்டு வந்து புறப்பட பத்து நிமிஷம் ஆகி இருக்கும். எட்டு மணிக்கு கிளம்பி இருந்த கண்டிப்பாக பிரச்சனை இருந்து இருக்காது , சாலையில் பெரிய அளவில் வாகன புழக்கம் இருக்காது , வேகமாக வந்து விடலாம் , ஆனா என்ன பண்ணுறது , அது அக்னீபாத் சீரிஸ் (கிரிக்கெட்டுக்கு சினிமா விளம்பரம்?)
பாக்ஸிங் டெஸ்ட் , நம்ம ஆளுங்களே பந்து நல்ல வீசி இருந்த மாதிரி இருந்தது , அப்படின்னா அவங்க பௌலிங் எப்படி இருக்கும் என்ற ஆர்வத்தில் , பார்க்க ஆரம்பிச்ச எதிர் பார்த்த மாதிரியே செமையா இருந்தது , நம்மளுக்கு தான் இவன் போன அவன், அவன் போன அடுத்தவன் நல்ல பண்ணுவான் ஒரு ஆர்வத்துல பார்க்க ஆரம்பிச்சா , அவனுங்களும் நம்ம போலவே அடுத்தவன் இருக்கான்னு போய்கிட்டே இருந்தானுங்க , நாம நம்புன எல்லாமே இப்படிதான் , இந்த சினிமா நல்ல இருக்கும், இந்த ஆட்சி நல்லா இருக்கும் , இந்த வேலை நல்ல இருக்கும், தேடி தேடி போனால், பெரும்பாலும் புஸ்வானம் தான் , எது நடந்தது இது மட்டும் நடக்குறதுக்கு, நமக்குதான்னு இப்படின்னா எல்லாரும் கிட்ட தட்ட அந்த லெவல்ல தான் இருக்காங்க !
இதையே பார்த்து கிட்டு இருந்தா நம்ம பொழப்பு நாறிடும், நடையே கட்டுவோம்னா , நடையே கட்டுறதுன்னா நடந்தே இல்ல, நடந்தே இல்லன்னாலும் நடைல தான் ஆரம்பிக்கணும் ,அப்படிதான் தாமதமாக கிளம்பினேன்! எட்டு மணிக்குன்னா சில நேரத்துல பிரேக்குக்கு கூட வேலை இருக்காது , ஆனா இன்னைக்கு அந்த பிரேக்குக்கு வேலை ரொம்ப கம்மி தான் , கொஞ்சம் கொஞ்சமாக கடந்ததால், அப்போது கூட டென்ஷன் இல்லாமல் எங்கே ஓட்ட முடியுது, கொஞ்ச கேப் கிடைச்சு வேகமா ஓட்டலாம்னு பார்த்தால், அப்போதான் ஒரு ஆட்டோ ரைட்(ride?) போவான் , ரைட் போறதுன்னா சவாரி இல்லாம என்ன பண்ணுறதுன்னு தெரியாமல் , வேகமா போயிட்டா சவாரி மிஸ் ஆயிடுமே என்கிற கவலை , மெதுவா போனால் வேற எவனாது பிக் பண்ணிடுவாங்குற கவலை , அவன நாம முந்துறதுன்னா ரொம்ப சிரமம் , பார்க்குறதெல்லாம் சவாரியே தெரியுமோ என்னமோ , வலது இடது , இடது வலது , வேகமாக மெதுவா, மெதுவா வேகமாக , அவன முந்துறதுக்குள்ள இருக்குற பாடு இருக்கே அவனுக்கு சவாரி கிடைச்சு முந்துனா, திரும்பி பயங்கரமா ஹாரன் சத்தம், வண்டியில பிரேக் புடிக்குறாங்களோ இல்லயோ! அவனே தான் , இப்போ சவாரி இறங்கும் வரைக்கும் கண்ணுமண்ணு தெரியாது , வழி விடாட்டி , காது கீய்ஞ்சுடும்(எனக்கும் தொத்திகிட்டா?) , வழி விட்டு திருப்பியும் அதே கதைதான், ஆமாம் ஊருல என்ன ஒரே ஆட்டோவா ஓடுது, அதுல வேற ஷேர் ஆட்டோன்னு ஒண்ணு, அவனுக்கு நாலு சில சமயத்துல அஞ்சு ஆள் கிடைக்கும், அது வரை ரைட் தான் அது, என்ன ஆட்டோல மூணு பேருன்னு லாஜிக் எல்லாம் கேட்க கூடாது, டிரைவர்க்கு ரெண்டு சைட் இல்ல ஒரு சைட் யாரையாச்சும் உட்கார வச்சுக்கிட்டு, பேலன்ஸே இல்லாம!
ஓட்டுனர்கள் தான் பிரச்சனை தான் பார்த்தா ஓடு பாதை அதற்க்கு மேல, நடு ரோட்ல ஒரு குளம்(குளம் சரி அல்ல குட்டை? )அதை அவாய்ட் பண்ணுறதுக்காகவே ரைட்ல போனால் அந்த பக்கமும் ஜாம் , இந்த பக்கமும் ஜாம் , எப்படா ரோட் ப்ரீ யாகும்னு எரிச்சல், கொஞ்சம் நூல் புடிச்சாப்ள மிதவேகத்துல போயிண்டே(இது வேறயா?) இருந்தா, தீடீர்னு பார்த்தால் ஒரு வேகத்தடை முளைச்சு(கவிதை , கவிதை) இருக்க, ஒரு எல்-போர்டு வண்டி அதுல, அதுக்கு மேல அதை எழுதவா வேணும்(குறைஞ்சு போய்டுவியா? சரி சரி), குடிகாரன் கூட வேகமா சாலைய கடந்து விடுவான் போல(அடடே உருவகம்)!
இதையெல்லாம் தாண்டி முக்கியமான சாலைக்கு (மெயின் ரோட்?) வந்துவிட்டால் , முக்கிய பிரமுகர்கள் போற சாலை, குழி எல்லாம் இருக்காதுன்னு எதிர் பார்க்க முடியாது, ஆனால் குட்டை இருக்காது, ஆனால் ஆங்காங்கே சிகப்பு விளக்கு தடை(அட) வேற , அது இல்லாட்டி கூட எல்லாரும் போயிடலாம் போல, அங்க நின்னு புறப்பட்டோம்னா, தேக்கி வைச்ச தண்ணி போல ஒரே பாய்ச்சல் தான்(அணை ஞாபகம் வருது –அடக்குடா அரசியல் வேணாம்), எங்க எங்க இடைவெளி இருக்கோ அங்கெல்லாம் கண நேரத்தில் நிறைஞ்சுடும், இதுல வேற மேன் பவர்ல(கூகிள்: சைக்கிள்க்கு ஹார்ஸ் பவர் இருக்க என்ன?) இருந்து பல நூறு குதிரை பவர்(Horse power) வரைக்கும் எல்லா வேகத்திலும் சங்கமித்து, அதனிடையே நம்ம வண்டியை முடுக்கி(கண்டிப்பா இடுக்கி இல்ல) ஒரு வழியா ஒரு ஐம்பதைத்தொட்ட சந்தோசத்துல , ஆட்டோ காரன் , எல் போர்டு, எல்லாம் மறந்து என் மீது மோதும்(என்னைத்தீண்டும்?) காற்றை ரசித்த படி, ஒரு பாடலை முணு முணுத்து , இனிமே எப்போதும் மறக்க முடியாம ஒண்ணு நடக்கும்னு யாரு எதிர் பார்த்தா? தீடீர்னு சத்தம் , முன்னால போன வண்டியில மோதி , ஒரு பைக் அப்படியே 90 திரும்புது, பரதேசி காதுல ஒரு காஸ்ட்லியான ஹெட் போன், தலையில ஹெல்மெட் இல்ல,, பதற்றத்துள்ள ஆக்ஸிலரேட்டரை ஒரு முறுக்கு முறுக்கி பிரேக்கை இயக்கினால் தலை மேல ஏறித்தான் நின்னுச்சு , மேலும் பதற்றம் அதிகரிச்சு , ஆக்ஸிலரேட்டரை தவிர எதுவும் தெரியாம, திரும்பி பார்க்காமல், ஆஃபிஸ் வந்து சேர்ந்து மணி பார்த்தால் பதினொன்று பத்து !”
இதை எந்தவித உணர்ச்சியும் இல்லாமல் , படித்த ஒருவர் , ஜட்ஜ் இடம் பாஸ் செய்ய , அரசு தரப்பு வக்கீல் , இது உங்க டைரி தானே , 4567 உங்க பைக் தானே என்றார் ?
1 comment:
Nice one!!! :)
Sirichu Padichen!!!
Exile novel Kokkarakko mathiri..una neeye suyavimarsanam pannikitathu arumai!!! :)
Post a Comment