Monday, April 25, 2011

மற்றுமோர் மாற்றம் !

நட்ட நடு வீட்டிலே
நண் பகலிலே
நான் கிடத்தப்பட்டு இருந்தேன்
நிர்வாணமாய்
கண் சிமிட்டலும் கையசைவும்
காலசைவும் புன்னகையும்
அழுகை எனும் ஒலிஎழுப்பி
ஆனந்தமாய் அப்பொழுது
ஒரு மொழியில்லை ...ஆனால்
ஒவ்வொரு அசைவுக்கும் ஆயிரம்
ஆயிரம் அர்த்தங்கள் !

இப்பொழுது
பேச ஒரு மொழி
எழுத ஒரு மொழி
அறையின் மூலையிலே
போர்வையின் உள்ளே
சத்தமின்றி அழுகையிட்டு
முகம் கழுவி எழுந்து வந்தேன்
அழுக்கில்லா ஆடை அணிந்து
அர்த்தமற்ற வார்த்தைகளுடன் !

No comments: