Tuesday, January 03, 2012

கடைசி வரி

கிழிக்க கிழிக்க

வந்து கொண்டே இருக்கிறது

தொலைக்க தொலைக்க

தட்டுப்பட்டு கொண்டே இருக்கிறது

தூர எறிந்த பின்பும்

அருகில் வந்து நிற்கிறது

தூங்கி மறந்தாலும்

கனவில் வந்து நிற்கிறது

என்னுடன் இருக்க வேண்டாம்

வந்து விடுவேன் என்றாலும்

போக மறுக்கிறது அந்த

ரிட்டர்ன் டிக்கெட் !

No comments: