Friday, October 12, 2012

அவன்

அவனை பற்றி ஒரு வரியில் சொல்லிவிடலாம்... அறிவாளி... எதையும் உன்னிப்பாக கவனிக்கும் ஆற்றல் அவனுக்கு கைவந்துள்ளது என்பதை அவன் பேசும் பேச்சிலே அறிந்து விடலாம்...

எங்கு என்ன பேசினாலும், வீட்டில் , தெருவில் , எங்கு என்ன பேசப்படுகிறதோ , ரகசியமாக பேசப்பட்டாலும் கூட அறிந்துகொள்ளும் கூர்மையான காது வேறு....

கூர்மையான காது மட்டுமா நீளமான வாயும் தான் ... எல்லா இடத்திலும் எல்லாம் பேசிக்கொள்(ல்லு)ளும்  ... ஒருவர் சொன்னது அவர் வார்த்தையாக மாற தொடங்கும் .. உதாரணமாக சொன்னோமானால், நம்ம ஏரியாவில் இது ரொம்ப மலிவு , அந்த ஏரியாவில் அது ஜாஸ்தி என்று யாரிடமாவது ஒருவர் சொல்ல அது அவரிடமே அரை நாளில் திரும்பி வரும் வேறொருவர் மூலமாக.. சில நேரத்தில் அவனை விட இவனிடம் அதை சொன்னவன் அறிவாளியாக மாறி இருப்பான் .. அறிவு என்பது அறிந்து கொள்வதுதானே..
இதெற்கென்ன, ரிஷி மூலம் , நதி மூலமா பார்க்க முடியும் , எல்லாம் எல்லாவற்றிக்கும் பொது தானே ....

எவன் மூலமாக எது எங்கு சென்றால் என்ன , எல்லாம் எங்கும் செல்ல வேண்டியதுதானே முக்கியம் என்று சொல்லலாம்.. ஆனாலும் .. எல்லாம் எங்கும் பகிரப்பட்டு விடுவது சில நேரங்களில் பிரச்சனையை உண்டு பண்ண கூடும்... அது மாதிரி சில பிரச்சனைகள் சமாளிப்பது கடினமாக மாறியது...

      இதற்கு தீர்வாக சில விஷயங்கள் , பலரிடம் பகிரப்பட்டது , அவன் அப்படித்தான் எல்லாரிடமும் உளறுவான் ... அவன் ஒரு பைத்திய திசையில் சென்று கொண்டு இருக்கிறான் என்றும் அவனை கண்டு கொள்ளாதே என்றும் .. பார்ப்பவர்களிடம் எல்லாம் கூறப்பட்டது ... 

இது மட்டும் அவன் காதுக்கு எட்டாமலா போகும்.. இப்போது அவன் அவனை பைத்தியம் என்று எல்லாரிடமும் சொல்ல. அவன் பைத்தியம் என்று பலர் இவனிடம் வந்து சொல்லுகின்றனர்....


No comments: