கை கொடுத்து அழைத்து வருகிறது... 9 காரா 12 கார என்று மனம் பட படக்கிறது இடம் பிடக்க... பட படத்து இடம் பிடிப்பது ஆற அமர்வதற்க்காக அல்ல.. ஏதோ ஒரு இடத்தில் நின்னு விடலாம் நிம்மதியாக...நிம்மதி என்று ஒன்று இருந்தால்... ஏறி நின்னுவிட்டால் போதும்.. ஓடும் ரயிலில் ஏறும் ஜாம்பவான்கள் ஒரு உந்தி எல்லாரையும் இடம் பெயர செய்வார்கள்... சில நேரம் வெறும் காலிலே அல்லது ஷூவிலோ .. ஷூவோ காலோ மாறிவிடும்.... அதற்குள் அடுத்த நிலையத்தில் இறங்குபவர் .... உங்களை தள்ளவோ உள் இழுக்கவோ ஆரம்பித்து விடுவார் ....கைக்குட்டை அவசியம்... நீங்கள் மற்றவரை காயப்படுத்திவிடக்கூடாது என்பதற்க்காக அல்ல.. உங்கள் முகத்தில் ஈரத்தை அப்புறப்படுதுவதற்க்காக ... ஆம்.. சிலர் உங்கள் மூஞ்சியில் தும்முவார்கள்....தும்மிவிட்டு கல்யாண மண்டப வாசலில் பன்னீர் தெளித்ததை போல் புன்னகை பண்ணுவார்கள்... நீங்கள் அதை ஐ ஆம் சாரி என்றே புரிந்து கொள்ள வேண்டும்.. பதில் பேச வேண்டாம்.....பேசினால் என்ன புண்ணியம்?
இருந்தும் நீங்கள் ஒரு இருத்தல்வயவாதியாக இருந்தால்.. நீங்கள் இருக்கலாம் ஒவ்வொரு நிமிடமும்.... நீங்கள் காணலாம் ஒரு அற்புதமான உலகு.. பிச்சை கேட்பவற்க்கு உணவே இடும் அற்புத மனிதர்களை அவர்களின் வியாக்யானங்களை தள்ளி வைத்து விட்டு பார்க்கலாம்.... சில நேரங்களில் உணவை வாங்கி துரத்தி செல்லும் மனிதர்களை கூட காணலாம்.. கீழே விழும் உணவிற்க்காக காசு வாங்கும் வியாபாரிகளை ...
உங்கள் கன்னத்தை கிள்ளியவாது காசு வாங்கும் திருநங்கைகளை... இறைவனிடம் கையேந்துங்கள்... பாடி நம்மளை இறைவனாக்கும் உச்சஸ்தானி பாடகர்களை... சில நேரம்.. விழும் பைசாக்களுக்கு ஏற்ப மாறும் உருகுதலை....
அதிர்ஷ்ட்டமிருந்தால் நீங்கள் கடந்து சென்ற ரயில் பிய்த்து போட்டு சென்ற உடல்களை ....சில நேரம் எம்பி3 ப்ளேயர் உதவியுடன் அனைவரைய்யும் ஊமையாக்கி பார்க்கலாம்...அவர்கள் சிரிப்புகள் ...சத்தமின்றி ரசிக்கலாம்...
முதல் வகுப்பில் செல்லும்
போது நீ காற்று வாங்கலாம்
நீ இரண்டாம் வகுப்பாய்
இருந்தால்....
No comments:
Post a Comment